பொது செய்தி

இந்தியா

தடுப்பூசியில் சாதனை: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இந்தியா, பிரதமர் மோடி, மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க தூதரகம், மருத்துவர்கள், மற்றும் மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரல் அத்னம் கெப்ரியேசஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கோவிட்டில் எளிதில் பாதிக்கப்படும்

புதுடில்லி: 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இந்தியா, பிரதமர் மோடி, மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க தூதரகம், மருத்துவர்கள், மற்றும் மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரல் அத்னம் கெப்ரியேசஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கோவிட்டில் எளிதில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்காகவும். தடுப்பூசி இலக்கை எட்டியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு பாராட்டுகள்.




மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையில், 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் புதிய இந்தியாவின் ஆற்றல், உலகிற்கு மீண்டும் எடுத்து காட்டப்பட்டு உள்ளது.


சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா

பிரதமர் மோடி தலைமையில், இந்தியா இன்று 100 கோடி தடுப்பூசி என்ற சாதனை படைத்துள்ளது. இந்திய வரலாற்றில் இன்றைய நாள் பொன்னான நாள் என பதிவாகும். இந்த சாதனையை 9 மாதத்தில் நிகழ்த்தி உள்ளோம். இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.


latest tamil news



பா.ஜ., தலைவர் நட்டா

10 மாதங்களில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் சுகாதார பாதுகாப்பில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்து காட்டுகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதுடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.


மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

ஒவ்வொரு இந்தியருக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். பல தடைகளை தாண்டி இந்த சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனை தொடரும். எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்து காட்டி உள்ளது. சில தலைவர்கள், மக்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி திசை திருப்ப முயற்சித்தனர். ஆனால், பிரதமர், மன் கி பாத் மற்றும் சில நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூட்டு முயற்சி மூலம் இந்த சாதனையை படைத்துள்ளோம்.


ஹரியானா முதல்வர் கத்தார்

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற சாதனை படைக்கப்பட்ட நிலையில், ஹரியானாவில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


ஐ.சி.எம்.ஆர்., இயக்குநர் பல்ராம் பார்கவா

அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டில் 100 கோடி பேர் உள்ளனர். ஒட்டு மொத்த உலகில் 700 கோடி பேர் வசிக்கின்றனர். இதன் மூலம்,உலகளவில் தடுப்பூசி இயக்கத்தில் 7 ல் ஒரு பங்கினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டில்லி ஆர்.எம்.எல்., மருத்துவமனை கண்காணிப்பாளரும், இயக்குநருமான டாக்டர் ஏ.கே. சிங் ராணா இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனைக்காக பிரதமர் உட்பட அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்று பிரதமர் மோடி, மருத்துவமனைக்கு வந்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.


தேசிய சுகாதார ஆணையத்தின் சி.இ.ஓ., ஆர்.எஸ்.ஷர்மா

100 கோடி தடுப்பூசி சாதனை என்பதில், ‛கோவின்' முக்கிய பங்காற்றியுள்ளது. இதற்கான நடவடிக்கையை எளிதாகவும், சுமூகமாகவும் மாற்றி கொடுக்கப்பட்டது. இந்த அளவிற்கு வேகமாக உலகத்தில் எந்த தளமும் செயல்படவில்லை.

சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை டீன் டாக்டர் இ.தீரன்ராஜன் கூறியதாவது: இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற சாதனை பெருமை அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். எந்த தயக்கமும் இன்றி, தடுப்பூசி எடுத்து கொள்ள முன் வர வேண்டும்.



இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-அக்-202114:02:50 IST Report Abuse
Ramesh Sargam உலக சுகாதார அமைப்புக்கு தெரிகிறது இந்தியாவை பாராட்ட. ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. மாறாக தடுப்பூசி போட்டதில் ஏதாவது குறை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பார்கள். வெட்கம். வேதனை. சோதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X