பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகஇன்று (அக்.,21ம் தேதி): தமிழ்நாடு
tamilnadu, 13 district, heavyrain, Weather, report, announce, தமிழகம், 13 மாவட்டங்கள், கனமழை, வாய்ப்பு, வானிலை ஆய்வு, மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக



latest tamil news


இன்று (அக்.,21ம் தேதி): தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 22 மற்றும் 23ம் தேதி: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news


24ம் தேதி: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை:


latest tamil news



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



சங்கரன்கோவில் (தென்காசி), மானாமதுரை (சிவகங்கை) தலா 9 செ.மீ., சோளிங்கர் (ராணிப்பேட்டை) 8 செ.மீ., ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கடவனுார் (கள்ளக்குறிச்சி), மஞ்சளாறு (தேனி) தலா 7 செ.மீ., வல்லம் (தஞ்சாவூர்), மங்களபுரம் (நாமக்கல்), குன்னுார், சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 6 செ.மீ., கோத்தகிரி, கெட்டி, ஜி பஜார் (நீலகிரி), நாங்குநேரி (திருநெல்வேலி), கயத்தார் (துாத்துக்குடி) தலா 5 செ.மீ., கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆம்பூர் (திருப்பத்துார்), கொட்டாரம் (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கடவூர், பாலவிடுதி (கரூர்), பவானிசாகர் (ஈரோடு), சூலுார் (கோவை), தஞ்சாவூர், சின்னக்கல்லார் (கோவை), கூடலுார் (தேனி, பர்லியார் (நீலகிரி) தலா 4 செ.மீ.,

குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவநிலை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.


latest tamil news





மீனவர்களுக்கான எச்சரிக்கை:




வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 21ம் தேதி: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 21ம் தேதி: கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X