பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு 15% அதிகரிக்க வாய்ப்பு: ஆய்வில் தகவல்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததைவிட, 15 சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.பருவநிலை மாறுபாடு மற்றும் மனிதர்களின் உடல்நலம் மற்றும் காலநிலைக்கு இடையிலான தொடர்பு குறித்து, 'தி லான்செட்' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து உள்ளதாவது:உலகளவில் வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2020ல் 65

புதுடில்லி: இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததைவிட, 15 சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

பருவநிலை மாறுபாடு மற்றும் மனிதர்களின் உடல்நலம் மற்றும் காலநிலைக்கு இடையிலான தொடர்பு குறித்து, 'தி லான்செட்' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து உள்ளதாவது:
உலகளவில் வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2020ல் 65 வயதுக்கு மேற்பட்டோரில் 310 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இடம்பிடித்தனர்.



latest tamil news



மேலும், 2020ல் ஏற்பட்ட கடும் வெப்பத்தால், 29,500 உழைக்கும் மணி நேரம் வீணானது. குறிப்பாக மனித வளம் அதிகமுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவில் இந்த இழப்பு அதிகமாக இருந்தது. அதேபோல் கடந்த 2018, 2019ல் இந்தியா, பிரேசிலில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததைவிட 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



லான்செட் கவுன்ட்டவுன் இயக்குநர் அந்தோனி காஸ்டெல்லோ கூறுகையில், 'பருவநிலை மாறுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் வறட்சியும், பஞ்சமும் பரவலாக அதிகரித்துள்ளது, 2021ம் ஆண்டு அறிக்கை படி, 134 நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202115:36:21 IST Report Abuse
அப்புசாமி அதனால் என்ப? 2025 க்குள்ளாற சப்கோ ஏ.சி தியா ஜாயேகா.. ஏ ஹமாரா சங்க்ல்ப் ஹைன். பட்டேல் ஜீக்கா சப்னா ஹைன்னு சொல்லி, ப்ரதான் மந்திரிக்கீ கரீபோங்கா ஏ.சி யோஜனானு பேரு வெச்சிட்டா போறுமே..
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
21-அக்-202114:33:57 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ////இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததைவிட 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது./// 1990ம் ஆண்டு முதல் இன்று வரையிலான முப்பது ஆண்டுகளில்... மனிதன், இயற்கையை புறக்கணித்தது மட்டுமல்லாமல்... தன்னை படைத்த இயற்கையைவிட, தான்தான் பெரிய அறிவாளி, கண்டுபிடிப்பாளி என்ன மமதையில்... திமிரில்... ஆணவத்தில்... அகந்தையில்... தலைக்கணத்தில்... கண்மண்தெரியாமல்... ஆக்ரோஷ ஆணவ ருத்ர தாண்டவம் ஆடி... இயற்கையை இம்சித்து... இயற்கையை அழித்து... அதனை நொண்டிகிட்டே இருந்ததன் விளைவுதான்... 1991ம் ஆண்டு முதல் இன்று வரை... உலகம் உருவான காலந்தொட்டே... அதன் வரலாற்றில்... கண்டிராத, கேட்டிராத, பார்த்திராத... சுனாமி, ஆண்டுதோறும் ருத்ரதாண்டவ புயல்கள், வறட்சி என்பது போன்ற “ட்ரைலர்” விட்டு பார்த்துச்சு இயற்கை... கடந்த 2020ம் ஆண்டு “கொரோனா”...ன்னு மெயின் பிக்சரின் டைட்டில்தான் போட்டிருக்கு... இனிவரும் காலங்களில்... ஆண்டுகளில்... மனித இனத்தை படைத்த இயற்கை தன்னை இம்சித்த... ரணப்பத்திய மனிதப் பதர்களை பந்தாடிட... ஆக்ரோஷமாய் பல்வேறு வடிவங்களில்... மெயின் பிக்சரா வரப்போகுது.... உலகத்தில் உள்ள அனைத்து மனிதப் பதர்களும் இன்னைக்கு “மாஸ்க்” போட்டு சுத்த வச்சிருக்கு... இனிமேதானடி இருக்கு... இயற்கையின் ஆக்ரோஷம், கோபம், வன்மம், பழிவாங்குதல்... இதிலிருந்து அற்ப “மனிதப் பதர்கள்” தப்பிக்கவே முடியாது... செத்தானுங்கடா...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X