சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை: கடைக்கு ‛சீல்!'

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
கோவை: கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடைக்கு ‛சீல்' வைத்தனர் .கோவை லட்சுமி மில் சந்திப்பில், லட்சுமி மில் நிர்வாகத்திற்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ‛ரோலிங் டப் கபே' என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகின்றது.இந்த ஐஸ்கிரீம்
கோவை, ஐஸ்கிரீம், மதுகலப்பு, விற்பனை, கடைக்குசீல், அதிகாரிகள் அதிரடி,

கோவை: கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடைக்கு ‛சீல்' வைத்தனர் .

கோவை லட்சுமி மில் சந்திப்பில், லட்சுமி மில் நிர்வாகத்திற்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ‛ரோலிங் டப் கபே' என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகின்றது.


latest tamil news


இந்த ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அலுவலகத்திற்கும் புகார்கள் சென்றது.

இதனையடுத்து உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் லட்சுமி மில் நிர்வாகத்திற்குச் சொந்தமான வணிகவளாகத்தில் தனியாரால் நடத்தப்படும் ‛ரோலிங் டப் கபே' என்ற ஐஸ்கிரீம் கடையில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


latest tamil news


ஆய்வின் போது ஐஸ்கிரீம் கடையில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் தயாரிப்பதும் அங்கு உறுதி செய்யப் பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்காக சேகரித்தனர். பின்னர் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‛சீல்' வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-அக்-202121:14:36 IST Report Abuse
Ramesh Sargam How dare they can prepare and sell such ice creams? The owner of the shop need to be jailed immediately.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-202104:49:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ரம் கேக், ரம் சாக்லேட், விஸ்கி, பிராந்தி, ரம் கலந்த ஐஸ்கிரீம் புதிது அல்ல.. அளவு மிக குறைவு. போதைக்காக சாப்பிடுவது அல்ல, ஒரு சுவைக்காக (flavor) சேர்க்கப்படுவது....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-202121:20:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சிவன் கோவில் பிரசாதம், ஆன்மீக பாங் உருண்டை உலக பிரசித்தம்.. கைலாசம் தெரியும்.....
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-அக்-202120:47:32 IST Report Abuse
Barakat Ali டாசுமாக்கு கவருமென்ட்டுக்கு போட்டியே இரூக்கப்படாது
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
21-அக்-202120:10:46 IST Report Abuse
s vinayak 70 களில் திருச்சியில் காபிக்கு புகழ் பெற்ற ஹோட்டலில் 63 பைசா காபியில் ருசிக்காக அபின் கலப்பதாக சொல்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X