சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: இருளில் மூழ்கிய குன்னூர்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
குன்னூர் : குன்னூரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழையால், இடி தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின் தடை ஏற்பட்டு குன்னூர் இருளில் மூழ்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், அருவங்காடு ஒசட்டி பள்ளம் பகுதியில், வீட்டில் மின்னல் தாக்கி மூதாட்டி பாப்பாத்தி
கனமழை, குன்னூர்,மின்தடை, மூதாட்டி,

குன்னூர் : குன்னூரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழையால், இடி தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின் தடை ஏற்பட்டு குன்னூர் இருளில் மூழ்கியது.


latest tamil news




நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், அருவங்காடு ஒசட்டி பள்ளம் பகுதியில், வீட்டில் மின்னல் தாக்கி மூதாட்டி பாப்பாத்தி என்ற கண்ணம்மாள், 85, படுகாயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, முகம், கைகால்களில் பாதிப்பு அதிகம் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டின் கூரை சேதமடைந்ததுடன், சில பொருட்கள் எரிந்தன.


latest tamil news


Advertisement


மாணிக்கம் பிள்ளை தோட்ட பகுதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து பாதிக்கப்பட்டது. பாரத் நகர், ரேலி காம்பவுண்ட், சிம்ஸ்பார்க் மின்வாரிய அலுவலகம் அருகே குடியிருப்பு உள்ளிட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். டென்ட்ஹில் சாலை, பிதாப்பூர் பேலஸ் பகுதிகளில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன.


latest tamil news


இதனால், பல இடங்களிலும் இரவு முழுவதும் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜான்சன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


latest tamil news



குன்னூர் நகரில் 55 மி.மீ., புறநகர், உலிக்கல்லில் 50 மி.மீ., எடப்பள்ளியில் 47 மி.மீ., மழை பதிவாகியது. தொடர்ந்து இரவு நேரங்களில் கன மழை பெய்து வருவதால் ஆற்றோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வருவாய்துறையினர் முன்னெச்சரிக்கையாக தகவல்கள் தெரிவித்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X