விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உண்டு, ஆனால் சாலைகளை மறிக்க கூடாது: உச்சநீதிமன்றம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களைஎதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமையுண்டு எனவும், ஆனால் சாலைகளை மறிக்க இயலாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில எல்லைகளில் நடந்து வருகிறது. இதனால், அந்த
Roads, Cant Be Blocked, Supreme Court, Farmers, Unions, Farmers Protest, Delhi, சாலைகள், தடுப்பு, மறிக்க இயலாது, உச்சநீதிமன்றம், டில்லி, விவசாயிகள், போராட்டம்

புதுடில்லி: வேளாண் சட்டங்களைஎதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமையுண்டு எனவும், ஆனால் சாலைகளை மறிக்க இயலாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில எல்லைகளில் நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலை முழுவதும் மிகப்பெரிய தடுப்புகள் அமைத்து போராட்டம் நடத்துவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சாலைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கவுல், ‛போராட்டம் நடத்தும் விவசாயிகள் காலவரையறை இன்றி சாலைகளை மறிக்க கூடாது. இது தொடர்பாக 43 விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதீய கிசான் சங்கம் உட்பட நான்கு சங்கங்கள் மட்டுமே பதிலளித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதேபோல், மக்களுக்கு சாலைகளில் செல்லவும் உரிமை உண்டு. எனவே சாலைகளை மறிக்க இயலாது,' எனக் கூறினார். மேலும், விவசாய சங்கங்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, அடுத்த விசாரணையை டிச.,7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-அக்-202122:10:09 IST Report Abuse
sankaseshan தரகர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இவனுங்களுக்கு பெருத்த அவமானம் எனவே அடாவடியில்இறங்கியுள்ளனர் தோற்கப்போவது உறுதி
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202120:02:38 IST Report Abuse
M  Ramachandran இதை விவாசாயிகளுக்கு கூறி உபயோக மில்லைய அவர்களை தூண்டும் அரசியல் கட்சிகளுக்குள் அறிவுரை கூற வேண்டும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
21-அக்-202119:26:15 IST Report Abuse
GMM போராட்டம் என்றால் சாலை மறியல், ரயில் மறியல், பொது/அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், சட்ட நகல் எரிப்பு... இல்லாமல் இருக்கும் போராட்டம் உப்பு சப்பு இல்லாத போராட்டம். ' உப்பு இல்லா பண்டம் குப்பையிலே' இந்து அகிம்சை போராட்டம் மறைந்து திராவிட, காங்கிரஸ் போராட்ட காலத்துக்கு வந்துள்ளோம். போராட்ட உரிமையை TV மாஃபியா கண்டுகொள்ள மாட்டார்கள். போராட்டம் மக்களை சென்று அடையாது. சட்டத்தை எதிர்த்து போராட பணம் தர மாட்டார்கள். போராட்டம் பிசுபிசுத்து விடும். எந்த போராட்டம் நடந்தாலும் பொது தேர்தல் ஒத்திவைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X