அணு ஆற்றலை வைத்து ஹைட்ரஜனை தயாரித்து, அதை மின் உற்பத்திக்கான எரிபொருளாக்குவது கட்டுபடியாகுமா? அணு மின் நிலையங்களை ஹைட்ரஜன் தயாரிப்பு நிலையங்களாகவும் மாற்றலாமா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணத் துடிக்கிறது அமெரிக்க எரிசக்தித் துறை.
இதற்கென அண்மையில், ஒரு சோதனைத் திட்டத்திற்கு ரூ.150 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது அமெரிக்க எரிசக்தித்துறை. அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரிலுள்ள பாலோ வெர்டே அணு உற்பத்தி நிலையத்தில், சோதனை ஹைட்ரஜன் ஆலையை ஒரு தனியார் நிறுவனம் அமைக்கவுள்ளது. அணு ஆற்றல் மூலம் ஹைட்ரஜனைத் தயாரித்தால் அதை, 'பசுமை' ஹைட்ரஜன் என்றே அழைப்பர். ஏனெனில், அணு ஆலையில் புகை வெளிப்படாது என்பதுதான். ஆனால், விபத்து நேர்ந்தால் ஏற்படும் கதிர்வீச்சு பற்றி இந்த இடத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை.
வரும் ஆண்டுகளில் சூரிய மின்னாற்றலுக்கே மவுசு அதிகரிக்கும். ஆனால், சூரிய வெளிச்சமும், வெப்பமும் குறைவாக இருக்கும் மாதங்களில் அணு மற்றும் இதர மின் உற்பத்தி முறைகளுக்கு தேவை இருக்கும். எனவே, வெயில் காலங்களில், அணு மின் நிலையங்கள், நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து, திரவ ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் நிலையங்களாக மாற்றலாம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதே வேளையில், அணு மின் நிலையங்கள், இரண்டாம் கட்ட வருவாய் ஈட்டுவதற்கு ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். அல்லது, அணு மின்நிலைய தேவைக்கு ஹைட்ரஜனை திரவ மின் கலனாகவும் பயன்படுத்தலாம்.பரிசோதனை வெற்றிபெற்றால்தான் இது சரிப்படுமா என்பது தெரியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE