நம்மூரில் மீல் மேக்கர் போன்ற சில உணவுகள், கடித்து உண்ண இறைச்சி போலவே இருக்கும். ஆனால், தாவர புரதத்தினால் ஆனவை அவை. இப்போது அதேபோல, அசல் இறைச்சியின் சுவைகொண்ட ஆனால், தாவர புரதங்களால் செய்த செயற்கை தாவர புரதம் சந்தைக்கு வந்துவிட்டது.
அது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், மெக்டொனால்ட்ஸ் உணவகம், தன் அமெரிக்க சங்கிலித் தொடரில், 'மெக்பிளான்ட்' என்ற பெயரில் அவற்றை அறிமுகப்படுத்தலாமா என, சிந்தித்து வருகிறது.
அதை தன் வாடிக்கையாளர்களிடமே கேட்டு விடலாம் என, தற்போது சிறிய அளவில் சோதனை அறிமுகங்களை மெக்டொனால்ட்ஸ் துவங்கிவிட்டது.தாவர புரத தொழில்நுட்பத்தை 'பியாண்ட் மீட்' என்ற நிறுவனத்திடமிருந்து மெக்டொனால்ட்ஸ் பெற்றுள்ளது. இதன் தொழில்நுட்பத்தின்படி தயாரித்த புரதங்கள் மெக்டொனால்ட்சின் வழக்கமான சுவைக்கு இணையாக இருப்பதாக விளம்பரம் செய்து வருகிறது மெக்டொனால்ட்ஸ்.
பட்டாணி, அரிசி மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றைக் கொண்டு தான் மெக்பிளான்ட் பர்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. வட்ட வடிவ கட்லெட் போல இருக்கும் மெக்பிளான்ட் பேட்டீஸ்களை, வழக்கமான பன், தக்காளி, மயோனிஸ் மற்றும் இதர வகையறாக்களுடன் சேர்த்து தருகிறது மெக்டொனால்ட்ஸ். ஏற்கவே கனடா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் இந்த சோதனை முடிந்துவிட்டது. தற்போது அமெரிக்காவில் சோதனை நடக்கிறது. இதிலும் வரவேற்பு இருந்தால், உலகெங்கும் மெக்பிளான்ட் சைவ பர்கர்கள் கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE