இரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி 91% இறப்பை தடுக்கிறது; ஆய்வில் தகவல்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன்: இரு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 91 சதவீதம் அளவிற்கு கோவிட் உயிரிழப்புகளை தடுக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.டெல்டா வகை கோவிட் வைரசால் உலகம் முழுவதும் பல நாடுகளில் 2வது, 3வது அலைகளாக பரவியது. இதனால் பெரிதளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன்
Covishield, 91 Percent Protection, Against Death, Delta Variant, Study, கோவிஷீல்டு, உயிரிழப்பு, தடுப்பு, டெல்டா, கொரோனா, கோவிட், ஆய்வு

லண்டன்: இரு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 91 சதவீதம் அளவிற்கு கோவிட் உயிரிழப்புகளை தடுக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா வகை கோவிட் வைரசால் உலகம் முழுவதும் பல நாடுகளில் 2வது, 3வது அலைகளாக பரவியது. இதனால் பெரிதளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கோவிட் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஓரளவு குறைந்தன.

இந்நிலையில், டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து கோவிட் தடுப்பூசி எந்த அளவிற்கு இறப்பு விகிதத்தை தடுக்கிறது என்பது குறித்த ஆய்வினை நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் மேற்கொண்டது.


latest tamil news


ஸ்காட்லாந்து அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பைசர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலை - அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும் சிறந்த பயனளிப்பதாக தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி குழு சார்பில் ஸ்காட்லாந்தில் 54 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இரு டோஸ்கள் பைசர் தடுப்பூசி செலுத்தியவர்களில் 90 சதவீதமும், இரு டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் 91 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-202107:44:04 IST Report Abuse
Srinivas கோவாக்ஸீனை விட கோவிஷீல்ட் சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X