சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூரில் ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் கடத்தல்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டத்தில், ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்து வருகின்றனர்.திருப்பத்துார் மாவட்டத்தில், திருப்பத்துார், கந்திலி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனுார் ஆகிய 6 ஒன்றியங்களில், 125 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலோர் தி.மு.க., வினரே வெற்றி
திருப்பத்தூர், ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவி, கவுன்சிலர்கள், கடத்தல்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டத்தில், ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்து வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டத்தில், திருப்பத்துார், கந்திலி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனுார் ஆகிய 6 ஒன்றியங்களில், 125 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலோர் தி.மு.க., வினரே வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், நாளை (அக்.,22) ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்வு அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். சில இடங்களில் ஆதரவு தெரிவித்தவர்களை கடத்திய சம்பவங்கள் நடந்துள்ளது.

கந்திலி ஒன்றியத்தில் 22 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 8, பா.ஜ. 1, சுயே., 3 என 22 கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கு 12 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. தலைவர் பதவி பெற தி.மு.க., அ.தி.மு.க., வுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 3 சுயே., ஆதரவு பெற்றவர் தான் தலைவராக முடியும். இந்நிலையில், நேற்று 3 சுயே., கவுன்சிலர்களிடம் ஆதரவு கேட்க அவர்கள் வீடுகளுக்கு அ.தி.மு.க.,வினர் சென்றனர். அவர்களை தி.மு.க.,வினர் கடத்திச் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.


latest tamil news



* ஆலங்காயம் ஒன்றியத்தில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 4, பா.ம.க., 2, சுயே., வேட்பாளர் ஒருவர் என 18 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., பெரும்பான்மை பெற்று இருந்தாலும் தலைவர் பதவிக்கு சங்கீதா, காயத்திரி இடையே போட்டி உள்ளது. நேற்று முன்தினம் பதவி ஏற்பு விழா முடிந்த உடன் தி.மு.க.,வினரே கவுன்சிலர்களை கடத்திச் செல்ல முயன்ற போது மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர் பாமிதா பானுவின் கணவர் ஆசிப்பை சிலர் கடத்தி விட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆசிப் நண்பர்கள் சவுக்கத் அலி, இஷாந்த் இன்று புகார் கொடுத்துள்ளனர். அதில், தனது நண்பர் ஆசிப் மனைவி பாமிதா பானு ஆலங்காயம் ஒன்றியம் 14வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். அவருக்கு தி.மு.க.,வில் ஒரு கோஷ்டியினர் தலைவர் பதவிக்கு தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கூறினர். அவர் மறுத்தார். இதனால் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு பின் கிருஷ்ணகிரிக்கு மாவட்டம், சூளகிரிக்கு காரில் எங்களுடன் சென்று கொண்டிருந்த அவரது கணவர் ஆசிப்பை சிலர் கத்தி முனையில் கடத்தி விட்டனர். அவரை மீட்டு தரும்படி குறிப்பிட்டுள்ளனர்.

* ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 25 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 6, சுயே., வேட்பாளர் ஒருவர் உள்ளனர். இங்கு தி.மு.க., பெரும்பான்மை பெற்றுள்ளனர். ஆனால் தலைவர் பதவிக்கு சத்யா, ஸ்ரீதேவி போட்டியிடுகின்றனர்.சத்யாவுக்கு 13, ஸ்ரீதேவிக்கு 11 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 13 பேர் ஆதரவு தெரிவித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதால் சத்தியாவுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களோ என்ற பயத்தில் அவர்களை கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு அழைத்துச் சென்று சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். இதனால் ஸ்ரீதேவி வெற்றி பெற அ.தி.மு.க., கவுன்சிலர்களின் ஆதரவை நாடி வருவதால் குதிரை பேரம் நடந்து வருகிறது. இதே போல மற்ற ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது.

இது தவிர துணை தலைவர் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று பதவி ஏற்ற கவுன்சிலர்களில் நிறைய பேர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர். அதற்கு, நாளை (அக்.,22) தலைவர், துணை தலைவர் தேர்தல் நடக்கும் போது அவர்கள் பத்திரமாக வந்து விடுவார்கள் என கூலாக போலீசார் பதிலளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202106:07:48 IST Report Abuse
Mani . V இப்பொழுது ஆள்வது யார் என்று நினைத்தீர்கள்? உலகையே திரும்பி பார்க்க வைத்த திருமங்கலம் பார்முலா ஆட்களாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X