பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கோவிட் தாக்கம் 18% குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
ஜெனிவா: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கோவிட் வைரசின் தாக்கம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கோவிட் வைரசின் தாக்கம் உலக அளவில் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால், கடந்த 11ம் தேதி

ஜெனிவா: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கோவிட் வைரசின் தாக்கம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news




இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கோவிட் வைரசின் தாக்கம் உலக அளவில் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால், கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை புதிய பாதிப்பு 18 சதவீதம் குறைந்து உள்ளது; இறப்பு விகிதமும் 13 சதவீதமாக குறைந்துள்ளது.


latest tamil news



கடந்த வாரம் போலவே நடப்பு வாரத்திலும் இந்தியாவில் புதிய பாதிப்பும், இறப்பும் குறைவாகவே உள்ளது. இதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் 18 சதவீதம், மேற்கு பசிபிக் நாடுகளில் 16 சதவீத அளவில் தாக்கம் குறைந்து உள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.இறப்பு விகிதத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் 23 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 19 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் 8 சதவீதமும் குறைந்து உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X