ஜெ., கார் டிரைவர் மரண வழக்கு மீண்டும் சூடுபிடிப்பு - Jayalalitha | Dinamalar

ஜெ., கார் டிரைவர் மரண வழக்கு மீண்டும் சூடுபிடிப்பு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (5) | |
ஆத்தூர்: ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பைத் தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டில், கடந்த, 2017, ஏப்ரல், 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28ம் தேதி, ஜெயலலிதாவின் கார் டிரைவர்,
மறைந்த முதல்வர் ஜெ, கார்டிரைவர், மரணவழக்கு, மீண்டும், சூடுபிடிப்பு

ஆத்தூர்: ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பைத் தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டில், கடந்த, 2017, ஏப்ரல், 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28ம் தேதி, ஜெயலலிதாவின் கார் டிரைவர், கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார்.


latest tamil news



இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 1ல் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக, சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளார். ஆத்தூர் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனகராஜ் உயிரிழந்தது தொடர்பாக கூடுதல் தகவல் போலீஸாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக போலீசாரும், அரசு வழக்கறிஞரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X