அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராணிப்பேட்டை, வேலூரில் உள்ளாட்சி பதவிகளை பிடிக்க குதிரை பேரம் முடிந்தது

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு தலைவர், பதவியை பிடிக்க குதிரை பேரம் முடிந்து விட்டது.ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, திமிரி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலோர் தி.மு.க., வை
ராணிப்பேட்டை, வேலூர், உள்ளாட்சி பதவிகள், குதிரை பேரம், முடிந்தது,

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு தலைவர், பதவியை பிடிக்க குதிரை பேரம் முடிந்து விட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, திமிரி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலோர் தி.மு.க., வை சேர்ந்தவர்கள்.மாவட்ட பஞ்சாயத்தில் 13 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 12 பேர் தி.மு.க., வும், ஒருவர் காங்., கட்சியை சேர்ந்தவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல வேலுார் மாவட்டத்தில், வேலுார், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி. குப்பம் ஆகிய 7 ஒன்றியங்களில் 138 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற 14 பேரும் தி.மு.க., வினர். இதனால் வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு யார்? யார்? என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக ஜெயந்தி, வேலுார் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


இது குறித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளை விட இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு அதிகளவு குதிரை பேரம் நடந்துள்ளது. ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் தலா 10 லட்சம் ரூபாய், துணைத் தலைவர் பதவிக்கு தலா 5 லட்சம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தலா 50 லட்சம் ரூபாய், துணை தலைவர் பதவிக்கு தலா 20 லட்சம் ரூபாய் என குதிரை பேரம் நடந்து முடிந்து இன்று கவுன்சிலர்களுக்கு பணம் செட்டில் ஆனதால் பிரச்சனைகள் வராது. சுமூகமாக நாளை (அக்., 22) தேர்தல் நடந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
21-அக்-202118:16:30 IST Report Abuse
jagan இதுங்க குதிரைகளா ? கழுதை பேரம் என்று சொல்லணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X