பொது செய்தி

இந்தியா

தேசிய ஓய்வூதிய அமைப்பின் சொத்து ரூ.6.67 லட்சம் கோடியாக உயர்வு!

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் அடல் ஒய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒருங்கிணைந்த சொத்தின் மதிப்பு செப்டம்பர் 30 நிலவரப்படி ரூ.6.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34.84 சதவீதம் அதிகம் ஆகும்.2004-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் மாநில அரசு
NPS, Assets Rise, PFRDA, YoY, 35 Percent, Rise, September, தேசிய ஓய்வூதியம், சொத்து, உயர்வு

புதுடில்லி: தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் அடல் ஒய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒருங்கிணைந்த சொத்தின் மதிப்பு செப்டம்பர் 30 நிலவரப்படி ரூ.6.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34.84 சதவீதம் அதிகம் ஆகும்.

2004-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் மாநில அரசு ஊழியர்களும் இணைக்கப்பட்டனர். 2009 முதல் இத்திட்டத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பணம் செலுத்தும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக இத்திட்டத்தை வழங்கலாம். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தில் 75 சதவீதம் வரை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டும். 60 வயதுக்கு மேல் சேர்ந்திருக்கும் மொத்த முதலீட்டில் 40 சதவீதத்திலிருந்து நாம் வட்டியை ஓய்வூதியமாக பெறலாம். 60 சதவீதத்தை கையில் பெற்றுக்கொள்ளலாம்.


latest tamil news


இதேபோல் அடல் பென்ஷன் திட்டம் என்பது பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தாங்கள் மாதம் தோறும் செலுத்தும் சிறுதொகை மூலம் 60 வயதுக்கு மேல் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்நிலையில் செப்., 2020-ல் 3.74 கோடியாக இருந்த ஓய்வூதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை செப்., 2021-ல் 4.63 கோடியாக உயர்ந்துள்ளது. அதில் அடல் பென்ஷனில் மட்டும் புதிதாக 76 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.


latest tamil news


அதேபோல் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்திருக்கும் தொகையும் கனிசமாக அதிகரித்துள்ளது. 2020 செப்டம்பருடன் ஒப்பிடும்போது மத்திய அரசு ஊழியர்களின் அளவு ரூ.1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மாநில அரசு ஊழியர்களின் அளவு ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.35 லட்சம் கோடியாகியுள்ளது. மொத்தமாக ரூ.6.64 லட்சம் கோடி ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202107:54:58 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்காவில் இதே மாதிரியான சோசியல் செக்யூரிட்டி ஃபண்ட் பணத்தை எடுத்து கிளிண்டன் முதல் அமெரிக்க ஜனாதிபதிகள் வேட்டுவிடப் பார்த்தார்கள். இப்போ இந்தியாவில் இது ஏழைப் பங்காளிகள் கண்ணை உறுத்துதோ என்னவோ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-அக்-202100:42:09 IST Report Abuse
Bhaskaran பி.எப் .நிறுவனம் தனியார் நிறுவனதோலிலாளிகளுக்கு ஓய்வூதியம் என்னும் பெயரில் சொல்ப பணம் கொடுக்கறாங்களே அதுமாதிரியா .மக்களே ஏமாரா வேண்டாம் மொத்தமாக ஆட்டையை போருருவங்க
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
21-அக்-202120:22:07 IST Report Abuse
ganesha ஒரு உ பி ஸ் வாயதரக்கரானா பார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X