ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி! உ.பி., தேர்தலுக்கு 'அள்ளி' விடுகிறார் பிரியங்கா

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ: பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி என தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா.உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சியை பெருவாரியான இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு
ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி!உ.பி., தேர்தலுக்கு 'அள்ளி' விடுகிறார் காங்., பிரியங்கா

லக்னோ: பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி என தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா.

உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சியை பெருவாரியான இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் பிரியங்கா, செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் இடங்களில் பெண்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


latest tamil news


இந்நிலையில் இன்று (அக். 21) தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் சந்தித்த பல பள்ளி மாணவிகள் , தாங்கள் படிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்மார்ட்போன்கள் தேவையாக உள்ளன என கூறினார்கள். இதையடுத்து வரும் சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன், கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பிரியங்கா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
21-அக்-202123:49:01 IST Report Abuse
amuthan ஹாஹா ஹாஹா நீங்கள் பதினைந்து லட்சத்தை முப்பது ஆக உயர்த்தி அள்ளி விடுங்கள். பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐம்பது ரூபாய் குறையும். டீசல் விலை நாற்பது ரூபாய் குறையும் என்று அள்ளி விடுங்கள். இந்தியா ரூபாய் மதிப்பு அமெரிக்கா டாலரை விட கூடும் என்று அள்ளி விடுங்கள். உங்களுக்கு இது எல்லாம் புதிதா
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
21-அக்-202123:43:11 IST Report Abuse
Raj எங்கே அந்த ஊழ்ழின் ஊற்று கண் துறை?
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
21-அக்-202122:29:28 IST Report Abuse
kmathivanan இவர் தீவரமாக பொய்சொல்லி அகிலேஷ் ஓட்டை காலி செய்வார் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X