பிரதமரின் ரூ.100 லட்சம் கோடி கதி சக்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (23) | |
Advertisement
புது டில்லி: மத்திய அமைச்சரவை இன்று (அக்., 21) பிரதமரின் கதி சக்தி எனும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. உள்கட்டமைப்பு திட்டங்களை சரியான முறையில் திட்டமிடுவதற்கும் சுமூகமாக நிறைவேற்றுவதற்கும் 16 அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே தடையின்மை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டுவருவதே கதி சக்தி திட்டத்தின் நோக்கம். அடுத்த 25

புது டில்லி: மத்திய அமைச்சரவை இன்று (அக்., 21) பிரதமரின் கதி சக்தி எனும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.latest tamil newsஉள்கட்டமைப்பு திட்டங்களை சரியான முறையில் திட்டமிடுவதற்கும் சுமூகமாக நிறைவேற்றுவதற்கும் 16 அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே தடையின்மை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டுவருவதே கதி சக்தி திட்டத்தின் நோக்கம். அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் செயல்திட்டமாக இது இருக்கும் என்கின்றனர். ரயில்வே, நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற முக்கிய மத்திய அரசு அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

திட்டமிடலுக்கும் திட்டமிட்டதை களத்தில் செயல்படுத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து, திட்டத்தை அதிக சக்தியுடனும், வேகத்துடனும் செயல்படுத்துவதே இதன் நோக்கம். அதற்காக அனைத்து துறைகளையும் டிஜிட்டல் முறையில் ஒரே குடையின் கீழ் இணைப்பர். இதன் மூலம் அமைச்சகங்களுக்கிடையேயான குழப்பங்களால் வேலைகள் தடைபடுவது குறையும். அதனால் நிதியிழப்பு தவிர்க்கபப்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


latest tamil newsஇந்நிலையில் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திட்டம் லாஜிஸ்டிக்ஸ் செலவைக் குறைக்க உதவும். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார ஆதாயமாக மாறும்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
22-அக்-202110:22:27 IST Report Abuse
JeevaKiran இத்தனை கோடி செலவு செய்து அந்த அந்த துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதற்காகவா?
Rate this:
22-அக்-202112:24:10 IST Report Abuse
ஆரூர் ரங்நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு👹 விற்று ஊழல் செய்தது எந்தக் கட்சி? Unit Trust of India, Housing Development Finance Corporation, Industrial Credit and Investment Corporation of India போன்ற அரசு நிறுவனங்கள் இப்போது எங்கே?...
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
22-அக்-202105:43:17 IST Report Abuse
Amal Anandan அவ்வப்போது இது போல உருட்டல்கள் வரும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-அக்-202123:00:12 IST Report Abuse
S. Narayanan Congratulations to Modiji. Please implement it giving best returns throughout India and to export our products throughout the world.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X