பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 21, 2021
Share
Advertisement
அக்., 22, 1919 தஞ்சை மாவட்டம் திருவையாற்றில், 1919 அக்., 22ம் தேதி பிறந்தவர் எச்.வேங்கடராமன். வறுமையின் காரணமாக கல்வி கற்க இயலாமல் இருந்தவருக்கு, வ.உ.சிதம்பரம், தன்னிடம் இருந்த தமிழ் நுால்களை கொடுத்து உதவினார். சென்னை பல்கலையில், வித்வான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.பட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கத்தில், உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியராக பணி புரிந்தார்.


இதே நாளில் அன்று


அக்., 22, 1919



தஞ்சை மாவட்டம்

திருவையாற்றில், 1919 அக்., 22ம் தேதி பிறந்தவர் எச்.வேங்கடராமன். வறுமையின் காரணமாக கல்வி கற்க இயலாமல் இருந்தவருக்கு, வ.உ.சிதம்பரம், தன்னிடம் இருந்த தமிழ் நுால்களை கொடுத்து உதவினார். சென்னை பல்கலையில், வித்வான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.பட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கத்தில், உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியராக பணி புரிந்தார். திருவையாறு கல்லுாரியில், 35 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.உ.வே.சா., நினைவு நுாலகத்தில், நுால் பதிப்புப் பணியில் ஈடுபட்டார். அவர் தொகுத்து வைத்திருந்த குறிப்புகளை பயன்படுத்தி, நற்றிணையை பதவுரையுடன் பதிப்பித்தார்.சென்னையில் உள்ள தருமபுரம் ஆதீன அமைப்பில், தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்பித்து வந்தார். 'தினமணி' நாளிதழில், நுால்களுக்கு மதிப்புரை எழுதினார். சென்னை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றினார். 1991 மார்ச், 28ல், தன் 72வது வயதில் காலமானார்.தமிழறிஞர் எச்.வேங்கடராமன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X