பொது செய்தி

இந்தியா

ராணுவ தளவாட ஏற்றுமதி : 'டாப் - 25'ல் நுழைந்தது இந்தியா

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி ; ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் முதன் முறையாக 'டாப் - 25' நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உள்நாட்டு தயாரிப்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்' உள்ளிட்ட ஒன்பது பொதுத் துறை நிறுவனங்கள் ராணுவ
ராணுவ தளவாட ஏற்றுமதியில் 'டாப் - 25'ல் நுழைந்தது இந்தியா

புதுடில்லி ; ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் முதன் முறையாக 'டாப் - 25' நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உள்நாட்டு தயாரிப்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்' உள்ளிட்ட ஒன்பது பொதுத் துறை நிறுவனங்கள் ராணுவ தளவாட தயாரிப்பைஅதிகரித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:மத்திய அரசு ராணுவ தளவாட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக ராணுவ தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள 25 நாடுகளில், முதன் முறையாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

ஸ்வீடனின் 'ஸ்டாக்ஹோம் சர்வதேசஅமைதி ஆராய்ச்சி மையம்' இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது; இது எனக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. ராணுவ தளவாடங்களில், குறிப்பாக தரைப்படை மற்றும் விமானப்படை பிரிவுகளின் ஏற்றுமதியை, 2024 - 25ம் நிதியாண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-202111:43:15 IST Report Abuse
nisar ahmad ஆயுத ஏற்றுமதியில் முன்னேற்றம்
Rate this:
Cancel
Sundar Anand - Chennai,இந்தியா
22-அக்-202110:42:57 IST Report Abuse
Sundar Anand ஜைஹிந்த் பாரத் மாதா கி ஜெய் வாழ்க ஸ்ரீ மோடி
Rate this:
Cancel
22-அக்-202104:19:49 IST Report Abuse
விஜய் அப்ப பட்டினி லிஸ்ட்டிலல் ஏன் சார் முன்னணியில இருக்ற....
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
22-அக்-202109:32:46 IST Report Abuse
SureshKumar Dakshinamurthyபட்டினி நாடுன்னு சொல்லி பிச்சை எடுக்கும் - இதனை வருடங்களில் எவ்வளவு பேரை உயர்த்தியுள்ளார்கள்? வித்தவுட்ல வந்த பிச்சைக்காரன் பல கோடி சொத்து சேர்த்தாலும் பிச்சை தான் எடுத்தான். அப்புறம் எப்படி முன்னேற முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X