உத்தரகண்ட் வெள்ளம் அமைச்சர் அமித் ஷா ஆய்வு

Updated : அக் 23, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டேராடூன்:உத்தரகண்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் மூன்று நாட்கள் விடாமல் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நைனிடால் உட்பட பல மாவட்டங்களில் கடும் சேதம்
உத்தரகண்ட் வெள்ளம் அமைச்சர் அமித் ஷா ஆய்வு

டேராடூன்:உத்தரகண்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் மூன்று நாட்கள் விடாமல் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நைனிடால் உட்பட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் உடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகண்ட் மாநிலத்துக்கு நேற்று வந்தார். டேராடூனிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அமித் ஷாவுடன், கவர்னர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராணுவ இணையமைச்சர் அஜய் பட் ஆகியோர் சென்றனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்தார்.

இதன்பின், வெள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன், அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனை நடத்தினார்.இது குறித்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் 7,000 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகளை சீரமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை54 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
22-அக்-202109:48:26 IST Report Abuse
சொல்லின் செல்வன் ஓரக்கண்ணுல காமெராவை பாத்துகிட்டு இருக்காரு
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
22-அக்-202105:41:24 IST Report Abuse
Raman அமைச்சர் கீழே நடந்து போயி பாக்க மாட்டாரா? மேலிருந்து மட்டும் பார்த்துட்டு போயிடுவாரோ ? சங்கிகள் ஊளை விடவேண்டாம் இதுவே எதிர்க்கட்சி அமைச்சர் யாராவது போனால் உடனே ஊளை விடுவீர்கள் தானே ? ஹி ஹி ஹி
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
22-அக்-202110:16:16 IST Report Abuse
தியாகு வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் போது தண்ணீர் இருக்கும், அதில் நடக்கமுடியாது. நீச்சல் அடித்துதான் போகமுடியும். அதனால் ஹெலிகாப்டரில் இருந்து பார்த்திருப்பார். ஹி...ஹி...ஹி......
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
22-அக்-202101:44:07 IST Report Abuse
அன்பு தமிழகத்திற்கு கொடுத்தது போன்று, பிசுக்கோத்து பிச்சி கொடுப்பார். நிதி உதவி எல்லாம் அஸ்க்கு பிஸ்க்கு,
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
22-அக்-202109:13:11 IST Report Abuse
தியாகு கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக அல்லக்கைகள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்தை வெளியில் விட்டாலே தமிழகத்தின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம். கொஞ்சம் விடியலிடம் சொல்லுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X