சிறையில் மகனை சந்தித்த ஷாருக் மும்பை வீட்டில் அதிரடி சோதனை?

Added : அக் 21, 2021
Share
Advertisement
மும்பை:போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகன் ஆர்யன் கானை, அவரது தந்தையும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் சந்தித்தார். இதற்கிடையே ஷாருக் கான் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. 10 நிமிடங்கள்மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு
 சிறையில் மகனை சந்தித்த ஷாருக் மும்பை வீட்டில் அதிரடி சோதனை?

மும்பை:போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகன் ஆர்யன் கானை, அவரது தந்தையும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் சந்தித்தார். இதற்கிடையே ஷாருக் கான் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.


10 நிமிடங்கள்

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.அதில் பயணித்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட சிலர் போதை பொருள் வைத்திருந்ததும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஆர்தர் சாலை சிறையில் ஆர்யன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஷாருக் கான், பலத்த பாதுகாப்புடன் ஆர்தர் சாலை சிறைக்கு வந்தார். தன் மகன் ஆர்யனுடன், ௧௦ நிமிடங்கள் அவர் பேசினார். கொரோனா தொற்று காரணமாக, சிறையில் உள்ள கைதிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. கைதிகளை குடும்பத்தினர் சந்திக்க மஹாராஷ்டிர அரசு நேற்று தான் அனுமதியளித்தது.

இதற்கிடையே, ஷாருக் கானின் மகனுக்கு ஜாமின் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இதை தொடர்ந்து மும்பையில் உள்ள ஷாருக் வீட்டில் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.


நடிகைக்கு சிக்கல்



போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரது 'வாட்ஸ் ஆப்' தொடர்பில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள்சோதனை நடத்தினர். பின், அவருக்கு 'சம்மன்' அனுப்பிய அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது 'லேப்டாப், மொபைல் போன்' ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே ஆர்யன் காவலை அக்., 30 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X