சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்!

Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பார்ட்டி ப்ளாரிஸ்ட்' என, பூ கட்டும் வேலை செய்து வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஜீவா கிருஷ்ணமூர்த்தி: சிறு வயதில் இருந்தே எனக்கு 'கிராப்ட்' வேலை செய்வது பிடிக்கும். என் கணவர் ஊர் ஈரோடு. அவர் என்னை, எம்.எஸ்சி., படிக்க வைத்தார்.அவர்கள் ஊரில் சிறு விழாக்களுக்கு போகும்போது கூட, இயற்கையான பூக்களால் ஆரம் கட்டி வைத்துக் கொள்வர். சென்னையில் நான் ஒருமுறை ஆரம் வைத்துச்
சொல்கிறார்கள்

'பார்ட்டி ப்ளாரிஸ்ட்' என, பூ கட்டும் வேலை செய்து வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஜீவா கிருஷ்ணமூர்த்தி: சிறு வயதில் இருந்தே எனக்கு 'கிராப்ட்' வேலை செய்வது பிடிக்கும். என் கணவர் ஊர் ஈரோடு. அவர் என்னை, எம்.எஸ்சி., படிக்க வைத்தார்.

அவர்கள் ஊரில் சிறு விழாக்களுக்கு போகும்போது கூட, இயற்கையான பூக்களால் ஆரம் கட்டி வைத்துக் கொள்வர். சென்னையில் நான் ஒருமுறை ஆரம் வைத்துச் சென்றபோது, எல்லாரும், 'நிஜமான பூவா; ரொம்ப நல்லா இருக்கே... நீங்களே செய்வீர்களா?' எனக் கேட்டனர். அப்போது தான், ஏன் இதையே பிசினசாக செய்யக் கூடாது என தோன்றியது.'பார்ட்டி பெட்டல்ஸ்' என்ற பெயரில் பிசினசை துவங்கினேன். ஆரம்பத்தில், அருகில் இருந்த அழகு நிலையங்களில் 'ஆர்டர்' கேட்க துவங்கினேன்.சிலர், 'நல்ல ஐடியாவா இருக்கே...' என ஆர்டர் கொடுத்தனர்; சிலர், 'இதெல்லாம் ஒரு வேலையா... கட்டுன பூவை தலைக்கு வச்சிக்கிட்டா ஆச்சு...' என ஏளனம் செய்தனர்.ஒரு திருமணத்திற்கு சம்பங்கிப் பூ வைத்து, சின்ன ஆரம் செய்து தர வேண்டும் எனக் கேட்டனர்; 250 ரூபாய் கிடைத்தது. அதுதான் என் முதல் ஆர்டர். அந்த திருமணத்தின் வாயிலாக, ஆர்டர்கள் வர துவங்கின.சிலர் சமூக வலைதளங்களிலும் ஆர்டர் செய்கின்றனர். திருமணம், ரிசப்ஷன், பிறந்த நாள் என, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், 'பிளவர் டிசைனிங்' செய்து கொடுக்கிறேன்.பூ கட்டத் தெரிஞ்சவங்க இதை சுலபமாக செய்யலாம். அடிப்படையான 2 - 3 மாடல்களை மட்டும் கற்றுக் கொண்டால் போதும். கொஞ்சம் பூக்கள், அதற்கு பயன்படும் கலர் ஸ்பிரே, சிறிய கம்பின்னு 2,000 ரூபாய் முதலீட்டில் இதை துவங்கலாம்.

கொஞ்சம் 'கிரியேட்டிவிட்டி'யோடு, 'டிரெண்டில்' உள்ள பூக்கள், டிசைன்களையும் 'அப்டேட்' செய்து கொண்டால் போதும்; மாதம் 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஆனால், இதிலும் சில சவால்கள் உள்ளன. முகூர்த்த நாட்களில் பூக்கள் கிடைப்பது சிரமம். பூக்கள் மிகவும் மிருதுவாக இருக்கும். அதன் தன்மையும், அழகும் மாறாமல் டிசைன் செய்ய வேண்டும். நிறைய ஆர்டர்கள் வந்தால், பூக்கள் வாடாமல் பார்த்து கொள்வதும் மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். வீட்டில் இருந்தபடியே பிசினஸ் துவங்க விரும்புவோருக்கு ஏற்றது. எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான்; அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.சொல்கிறார்கள்! அவள் விகடன் அக்., 26; பக்: 20

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-அக்-202104:44:29 IST Report Abuse
NicoleThomson பார்ட்டி பெட்டல்ஸ் எனும் இவரது கம்பெனியும் jeeva.krishnamoorthy.58 என்பது இவரின் முகநூல் அட்ரஸ் கூட மிக பிரபலம் , எங்கோ இருக்கும் நான் இவரின் பாலோயர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X