கிளாஸ்கோ மாநாடு; 2050 பருவநிலை இலக்கை எட்ட முடியுமா? மோடி ஆலோசனை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிளாஸ்கோ: அமெரிக்கா சீனாவை அடுத்து உலகில் கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளிவிடும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்ட நாடு இந்தியா. உலக அளவில் புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல தலைவர்கள் தங்கள் நாட்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பருவநிலை மாற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில் பாரத பிரதமர் நரேந்திர

கிளாஸ்கோ: அமெரிக்கா சீனாவை அடுத்து உலகில் கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளிவிடும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்ட நாடு இந்தியா.



latest tamil news



உலக அளவில் புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல தலைவர்கள் தங்கள் நாட்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பருவநிலை மாற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக விவாதிக்க கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ள ஐநா காலநிலை ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த மாநாட்டுக்கு COP26 என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதி துவங்க உள்ள இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரது வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே கார்பன் புகையை கட்டுப்படுத்துவதாக இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில் காலநிலை மாற்றத்தை தடுக்க மத்திய அரசு தேவைக்கு அதிகமாகவே முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். உலக அளவில் கார்பன் புகையை கட்டுப்படுத்த ஓர் சராசரி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவுக்கு ஐநா நிர்ணயித்த அளவைவிட மத்திய அரசு அதிக கட்டுப்பாடுகளை கொண்டுவந்து முடிந்த அளவு கார்பன் புகையை கட்டுப்படுத்தி வருகிறது என்று யாதவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை மின் ஆற்றல் அளவை 450 ஜிகா வாட் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்குத் தேவைப்படும் மொத்த மின் ஆற்றலில் 25 சதவீதம் இயற்கை தயாரிப்புகள் வாயிலாகவே கிடைக்கின்றன. 2050ம் ஆண்டுக்குள் உலக அளவில் 1.5 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தை குறைக்க ஐநா., வலியுறுத்தி வருகிறது.

அதற்குள் கார்பன் புகைகளை முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகள் முயலவேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா இன்னும் கட்டுப்படவில்லை. இதுகுறித்து கிளாஸ்கோ கூட்டத்தில் பிரதமர் மோடி விவாதிக்கவுள்ளார்.


latest tamil news



இதுதொடர்பாக மத்திய பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் முன்னதாக கூறுகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் காலநிலை மாற்றத்தை குறைக்க வளர்ச்சிகண்ட நாடுகள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார்.கிளாஸ்கோ காலநிலை மாற்ற கூட்டத்தில் புவி வெப்ப மயமாதலை தடுக்க இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202123:02:22 IST Report Abuse
அப்புசாமி சீனா ஒத்துக்கலேன்னா நாமளும் ஒத்துக்கமாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X