எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

வைகோ மகன் வழிநடக்க கிளம்புகிறது எதிர்ப்பு : தனி இயக்கம் துவக்கம்; ம.தி.மு.க., உடையுமா?

Updated : அக் 22, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
''ம.தி.மு.க.,வை உடைக்கிற நோக்கம் எனக்கில்லை,'' என, அக்கட்சியிலிருந்து விலகிய, மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கூறினார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலைய செயலர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலர் ஈஸ்வரன், நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார். அவரது சிறப்பு பேட்டி:பி.இ., படித்த நான்,
வைகோ மகன் வழி நடக்க,  தனி இயக்கம் துவக்கம்; ம.தி.மு.க., உடையுமா?

''ம.தி.மு.க.,வை உடைக்கிற நோக்கம் எனக்கில்லை,'' என, அக்கட்சியிலிருந்து விலகிய, மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கூறினார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலைய செயலர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலர் ஈஸ்வரன், நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார்.
அவரது சிறப்பு பேட்டி:


பி.இ., படித்த நான், கோவையில், 'எலக்ட்ரிக்கல் மற்றும் பர்னிச்சர்' பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் புரிகிறேன். என் தந்தை வேலுசாமி, கோவை மாவட்ட தி.மு.க.,வில், மதுக்கரை கிளை செயலராக இருந்தார்.தி.மு.க.,வின் வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்த வைகோவை, கட்சியிலிருந்து வெளியேற்றிய போது, அவருக்காக நீதி கேட்டு, ம.தி.மு.க.,வில் இணைந்தேன். கோவை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளர், மாநில துணை அமைப்பாளர், மதுக்கரை ஒன்றிய செயலர், கோவை மாவட்ட செயலர் போன்ற பதவிகள் வகித்து, தற்போது, மாநில இளைஞரணி செயலர் பதவி வகித்து வந்தேன்.


விலக வேண்டாம்கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், கிணத்துக்கிடவு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கடந்த சட்டசபை தேர்தலில், 'சீட்' கேட்டேன். கூட்டணியில் ஒதுக்கீடு செய்யவில்லை. 28 ஆண்டுகளாக, என் வாழ்க்கையை, ம.தி.மு.க.,வுக்காக அர்ப்பணித்து
உள்ளேன். கட்சி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று உள்ளேன். வைகோ, நான் நேசிக்கிற தலைவர். அவர் என்னுள் போராட்ட கொள்கையை விதைத்தார். அது என்னை ஆட்கொண்டு விட்டது. சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், வாரிசு அரசியல் உருவாகும் சூழ்நிலை ம.தி.மு.க.,வில் ஏற்பட்டது.'எது நடக்கக் கூடாது என நினைத்தேனோ, அது நடந்து விட்டது' என, வைகோ கூறியதும், அது நடப்பதற்கு முன் கட்சியிலிருந்து விலகி, ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டேன்.'விலக வேண்டாம்; கட்சியில் இருங்கள்' என, வைகோ சமாதானப்படுத்தினார். அதனால், தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட்டேன். தற்போது, துரைக்கு பதவி வழங்கிய நிகழ்வு, எனக்கு பெரிய மன வருத்தமும், வலியும் அளித்து உள்ளது.அண்ணாதுரை தனக்கு பின், தி.மு.க.,வில் இவர் தான் அடுத்த தலைவர் என, யாரையும் அடையாளம் காட்டவில்லை.


ஜனநாயகம் அல்லஅவர் மறைவுக்கு பின், மூத்த தலைவர்கள் சேர்ந்து, கருணாநிதியை தேர்ந்தெடுத்தனர்.'தம்பி வா, தலைமை ஏற்க வா' என, துரைக்கு அழைப்பு விடுத்து, ம.தி.மு.க., முப்பெரும் விழாவில், செந்தில் அதிபன் பேசுகிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடந் 28 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களில் ஒருவருக்கு கூட, தலைவர் பதவிக்கு தகுதி இல்லையா? கட்சியில் தலைவர் இருக்கும்போது, அடுத்த தலைவராக அவரது மகன் வழிநடத்துவார் என்று முடிவு எடுப்பதை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகம் அல்ல.

இப்போதைக்கு அடுத்த தலைவர் யார் என்ற தேவையும், அவசியமும் இல்லை. அதை காலமும் சூழ்நிலையும் தான் தேர்ந்தெடுக்கும். தனிப்பட்ட துரை மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. தலைவர் மகன் அரசியலுக்கு வரலாம்; பதவிகளை பெறலாம். ஆனால், அவர் தான் வழிநடத்தி செல்வார் என்பதை தான் எதிர்க்கிறேன். எனவே, இனி ம.தி.மு.க.,வில் பயணிக்க விரும்பவில்லை. அதேசமயம் ம.தி.மு.க.,வை உடைக்கிற நோக்கம் எனக்கு இல்லை. அரசியலை துாய்மைப்படுத்த, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, சமூக மாற்றங்களை ஏற்படுத்த, எனக்கு ஒரு களம் தேவைப்படுகிறது. மக்கள் பணிகளை செய்யவும், அரசியல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், 'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவக்க உள்ளேன். இதில் ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறும் அதிருப்தியாளர்களும் இணைந்து பணியாற்றலாம். இவ்வாறு, ஈஸ்வரன் கூறினார்.

முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு

வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலையச் செயலர் பதவி வழங்கிய கூட்டத்தை, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, எட்டு மாவட்டச் செயலர்கள் உட்பட, 18 முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர்.ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதற்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்திருக்க வேண்டும். ஆனால், அவர் பங்கேற்கவில்லை. துரைக்கு பதவி வழங்க, எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவரைத் தொடர்ந்து, உயர்நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், 18 பேர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

அவர்கள் விபரம்:

* திருப்பூர் துரைசாமி, அவைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., தொழிற்சங்க தலைவர்

* சண்முக சுந்தரம், விருதுநகர் மாவட்டச் செயலர்

* முன்னாள் அமைச்சர் சந்திரசேகர், புதுக்கோட்டை மாவட்ட செயலர்

* புலவர் செவந்தியப்பன், சிவகங்கை மாவட்ட செயலர் மற்றும் அரசியல் ஆலோசனை குழு செயலர்

* செங்குட்டுவன், திருவள்ளூர் மாவட்ட செயலர் மற்றும் ஆட்சிமன்ற குழு செயலர்

* வழக்கறிஞர் தேவதாஸ், சட்டத்துறை செயலர்

* வழக்கறிஞர் அழகுசுந்தரம், கொள்கை விளக்க அணி செயலர்

* ஈஸ்வரன், இளைஞரணி மாநில செயலர்.

* வழக்கறிஞர் வீரபாண்டியன், உயர்நிலை குழு உறுப்பினர்.

* பாஸ்கர சேதுபதி, தொண்டரணி செயலர்

* மாரியப்பன், திருப்பூர் மாவட்ட செயலர்

* டி.என்.குருசாமி, நாமக்கல் மாவட்ட செயலர்

* செல்வராகவன், திண்டுக்கல் மாவட்ட செயலர்

* செந்தில், கோவை புறநகர் மாவட்ட செயலர்

* அட்டாரி நஞ்சன், நீலகிரி மாவட்ட செயலர்

* மோகன், மயிலாடுதுறை மாவட்ட செயலர்.

* வளையாபதி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர்

* ராமலிங்கம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்.


தொடரும் விலகல்துரைக்கு, கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலர் ஈஸ்வரன், அக்கட்சியல் இருந்து விலகியதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரை தொடர்ந்து, கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலர் சம்பத் குமாரும் விலகி விட்டதாக, வைகோவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-அக்-202103:10:59 IST Report Abuse
meenakshisundaram வைகோ வின் பித்தலாட்டம் கண்டு மக்கள் திகைத்து போயுள்ளனர் கொத்து கொத்தாக தமிழனை கொன்றவர் என்று அழுது முக வை ஒதுக்கினார் ,ஸ்டாலினை குறை கூறாத நாளில்லை .ஆனால் அவரிடமே சென்று சரண் அடைந்து தண்ணீரில் சத்தியம் செயது முதலவாறாக வேண்டும் என்று பிரார்த்தனை (?) செயது விட்டு தனது கடைசி காலத்தை முடிந்தவரை தமிழர்கள் கண்ணில் தென்படா தவாறு டெல்லியிலே ஒய்வு எடுக்கிறார் இதில் அவரும் திருமாவும் ஒரே படகில் பயணிக்கிறார்கள் .ஏதோ மதிமுக என்று ஒரு கட்சி (?) இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி சொத்துக்களை அனுபவிக்க ஒரு வாரிஸை தெரிந்து எடுத்து விட்டு -மறைமுக வாக்கெடுப்பில் -தனக்கு தெரியாமலேயே கட்சியினரின் முடிவால் தனது மகன் பதவியை பெற்றார் என்று கூறும் தைரியம் இவருக்கு எப்படி வந்தது ?முக வின் அடி சுவட்டை அப்படியே கடைப்பிடித்து அல்லவா ?கட்சியை களைத்து விட்டு ஓசி சோறு சாப்பிட திமுகவிலேயே இனைந்து விட இவருக்கு யார் குறுக்கே நிற்கிறார்கள் ?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
22-அக்-202122:51:49 IST Report Abuse
Mohan இவ்வளவு பேசுற நீயும் ஒரு திமுகவை சேர்ந்த அரசியல்வாதியின் வாரிசு அரசியல்வாதிதானே.
Rate this:
Cancel
Gnana Subramani - Chennai,இந்தியா
22-அக்-202122:31:38 IST Report Abuse
Gnana Subramani கட்சியில் வாட்ச்மேன சேர்க்காமல் 106 பேர் இருக்காங்க. ஒரு பஸ் கொண்டு போனால் கட்சியை ரெண்டாக பிரித்து விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X