அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் பணம், மது ஆறாக ஓடும்: பா.ஜ., இப்ராஹிம் எச்சரிக்கை

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை:''கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக ஓடும். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,'' என்று பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக

கோவை:''கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக ஓடும். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,'' என்று பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.
அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தால் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.முன்னோர் இறைவனுக்கு தானமாக கொடுத்த, பாரம்பரிய ஆபரணங்களை ஒருபோதும் உருக்கி அழித்து தங்க கட்டிகளாக மாற்றக்கூடாது. இது பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல்.



latest tamil news



கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக கரைபுரண்டோடும். பலரும் மூழ்குவர். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




கமிஷனரிடம் புகார்


கோவை போலீஸ் கமிஷனரிடம் இப்ராஹிம் அளித்த மனுவில், பேஸ்புக்கில் இரு நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-அக்-202113:41:54 IST Report Abuse
Vena Suna அவர்களிலே இவர் ஒரு நல்ல இவர்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-அக்-202112:35:23 IST Report Abuse
Lion Drsekar குழந்தைகள் பிறக்கும் மகப்பேறு மருத்துவமனை முதல் சுடுகாடு வரை இவைகள் இரண்டும் இல்லாத இடம் எது ? சாதிக்கும் மதத்துக்கும், மொழிக்கும் அப்பாற்பட்டு எல்லாமே இதில் ஒன்றாக இருக்கிறார்கள் . வந்தே மாதரம்
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
22-அக்-202112:34:50 IST Report Abuse
Bala தமிழகத்திலே பெருமளவில் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் திரு இப்ராஹிம் மற்றும் திரு அண்ணாமலை போன்றவர்களின் முயற்சியால் காலத்துக்கு ஏற்றார்போல் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். திராவிட கட்சிகள் வாக்கு வங்கிகளாக தங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை இப்பொழுதாவது உணருகின்றார்களே. வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X