ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி! 'அள்ளி' விடுகிறார் காங்., பிரியங்கா

Updated : அக் 22, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (37+ 15)
Share
Advertisement
லக்னோ :உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களை கவரும் வகையிலான அறிவிப்புகளை, காங்., பொதுச் செயலர் பிரியங்கா வெளியிட்டு வருகிறார். ''ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு 'ஸ்மார்ட் போன்' மற்றும் பட்டதாரி பெண்களுக்கு 'ஸ்கூட்டி' வாகனம்
ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி! 'அள்ளி' விடுகிறார் காங்., பிரியங்கா

லக்னோ :உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களை கவரும் வகையிலான அறிவிப்புகளை, காங்., பொதுச் செயலர் பிரியங்கா வெளியிட்டு வருகிறார்.

''ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு 'ஸ்மார்ட் போன்' மற்றும் பட்டதாரி பெண்களுக்கு 'ஸ்கூட்டி' வாகனம் இலவசமாக வழங்கப்படும்,'' என, பிரியங்கா அறிவித்துள்ளார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில்,உத்தர பிரதேசம் மிக முக்கியமான மாநிலம்.

கடந்த 2017ல் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து, 105 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., ஏழில் மட்டுமே வென்றது.ஒரு காலத்தில் காங்.,கின் கோட்டையாக உ.பி., இருந்தது. அதன்பின் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அளவுக்கு காங்., தேய்ந்து போனது.கடந்த லோக்சபா தேர்தலிலும் காங்., படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் மட்டும் சோனியா வென்றார். கட்சியின் இரும்பு கோட்டையாக கருதப்பட்ட அமேதியில், அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல் தோல்வியடைந்தார்.கடந்த சட்டசபை தேர்தலின்போது சோனியாவின் மகள் பிரியங்கா, கட்சியின் பொதுச் செயலராகவும், மாநிலப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

உ.பி.,யில் பா.ஜ., தற்போது மிகவும் வலுவாக உள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை, காங்.,கை கழற்றிவிட்டு தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. வேறு வழியில்லாமல் தனித்து போட்டியிட வேண்டிய நிலையில், 2022 தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க, காங்., வியூகங்களை வகுத்து வருகிறது.தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, கட்சியை வளர்க்க பிரியங்கா முயன்று வருகிறார். 'வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் 40 சதவீத இடங்களில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்' என, பிரியங்கா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா நேற்று கூறியதாவது:உ.பி.,யில் சில மாணவியரை சந்தித்து பேசினேன்; தங்கள் படிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஸ்மார்ட் போன் தேவைப்படுவதாக அவர்கள் கூறினர்.எனவே, வரும் தேர்தலில் வென்று காங்., ஆட்சி அமைத்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு ஸ்மார்ட் போனும், பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டி வாகனமும் இலவசமாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு, இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடந்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பல்வேறு இலவசங்களை, சலுகைகளை அறிவித்தன. ஆனால் ஆட்சி அமைத்த பின், அவற்றை செயல்படுத்த முடியாமல் தி.மு.க., திணறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பெண்களை கவரும் வகையில் இலவச அறிவிப்புகளையும் பிரியங்கா அள்ளி விட்டு வருகிறார்.

அடுத்து வரும் மாதங்களில், இது போன்று பல்வேறு இலவச அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 20.42 கோடியாக உள்ளது. நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உடைய மாநிலமாக உ.பி., உள்ளது. மக்கள் தொகையில் பெண்கள் 10 கோடிக்கு மேல் உள்ளனர். அதில் பள்ளிப் படிப்பு, கல்லுாரி படிப்பை முடித்தவர்கள் குறைந்தபட்சம் 10 லட்சமாக எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி போன்றவற்றை வழங்குவது மிக மிக கடினம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.




போலீஸ் மீது நடவடிக்கை?



போலீஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை சந்திக்க, ஆக்ராவுக்கு நேற்று முன்தினம் பிரியங்கா செல்ல முயன்றார். முதலில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், பின் அனுமதிக்கப்பட்டார். அப்போது சில பெண் போலீசார், பிரியங்காவுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.இது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரியங்கா கூறியுள்ளதாவது:என்னுடன் பெண் போலீசார் செல்பி எடுத்துள்ளது, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
என்னுடன் படம் எடுப்பது குற்றச் செயலா? அப்படி நடவடிக்கை எடுத்தால், பெண் போலீசாரின் வேலையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக என் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202122:26:03 IST Report Abuse
பேசும் தமிழன் எப்போதும் போல் பொய் தான் சொல்ல போகிறீர்கள்... ஆளுக்கு ஒரு கப்பல் இலவசம் மற்றும் சுற்றிப்பார்க்க ஆளுக்கு ஒரு பிளேன் இலவசம்.... பொய் வர ஆளுக்கு ஒரு ட்ரைன் இலவசாம் என்று அடித்து விட வேண்டியது தானே.... ஏன் இந்த கஞ்சதனம் ???
Rate this:
Cancel
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
22-அக்-202120:15:56 IST Report Abuse
ஏகன் ஆதன் மோடி பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று பில் போர்டு வைத்தாரா , போஸ்டரை அடித்து விளம்பரம் செய்தாரா டிவியில் மணிக்கு ஒருமுறை இலவச டிவி போல விளம்பரம் செய்தாரா ? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை . அப்படி செய்து இருந்தால் தமிழகத்தில் ஏன் தோற்றார் ? ஆனாலும் குடும்ப அடிமைகள் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சளைக்காமல் சொல்லுகிறார்கள் . வரிப்பணத்தை இலவசம் கொடுத்து ஏமாற்றும் கும்பல் கூசாமல் பொய் கூறி திரிகிறது
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
22-அக்-202119:13:28 IST Report Abuse
Mohan திருமங்கலம் பார்முலா இந்தியா எங்கும் பரவும் முன்ன தடுக்க பட வேண்டும் இல்லை என்றல் இந்தியாவே இலவசத்துக்கு அடிமையாகி போயி நாளை பாக்கிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் எதாவது தருகிறோம் என்று சொன்னால் நம்ம அவ்ளோதான்....மோடி / நீதித்துறை / தேர்தல் ஆணையம் எதாவது செய்து தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X