அரசியல் செய்தி

தமிழ்நாடு

50 ஆயிரம் இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கிருஷ்ணகிரி :''தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கிருஷ்ணகிரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை
50 ஆயிரம் இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி :''தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கிருஷ்ணகிரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டியில், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் இள வயது கர்ப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அமைச்சர்கள் வழங்கி, கலை நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தனர்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில், 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 130 கோடி மக்களில் 70 சதவீதம் பேர், 18 வயதை கடந்தவர்கள். தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக, 2.72 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரை, 5 கோடியே 40 லட்சத்து 8,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.வரும் சனிக்கிழமை ஆறாவது மெகா முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. இதில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கும் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு முதல் தவணையும்; 28 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
22-அக்-202110:56:25 IST Report Abuse
Duruvesan விடியலு செங்கல் பட்டுல வூசி தயாரிச்சி உலகுக்கே சப்ளை பண்ணிக்கிறாரோ? ஆமென்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-அக்-202110:16:50 IST Report Abuse
duruvasar தமிழின தலைவர் போட்டா இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அரசு என்ற ஸ்கூட்டர் ஓட்டும்போது தலை வர் புகைப்படம் என்ற உயிர் காக்கும் தலை கவசத்தை அணிந்து செல்லுங்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202106:31:38 IST Report Abuse
Kasimani Baskaran மோடி ஊசி என்று ஒரு காலத்தில் கிண்டல் செய்தவர்கள் இன்று மோடி ஊசியை போட ஊக்கப்படுத்துகிறார்கள்... திமுக வழியில் தனியாருக்கு எவ்வளவு தள்ளி விட்டார்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X