அரசியல் செய்தி

தமிழ்நாடு

படக் கண்காட்சியில் ஜெயலலிதா படம்: பன்னீர்செல்வம் கோரிக்கை

Updated : அக் 23, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: 'நாகப்பட்டினம் மாவட்டம் உருவான வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியில், மாவட்ட துவக்க விழாவில் ஜெயலலிதா பங்கேற்ற புகைப்படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:நாகப்பட்டினம் மாவட்ட வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியில், அந்த மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்த
படக் கண்காட்சி, ஜெ.,படம்: பன்னீர்செல்வம்  கோரிக்கை


சென்னை: 'நாகப்பட்டினம் மாவட்டம் உருவான வரலாற்றை சித்தரிக்கும் புகைப்
படக் கண்காட்சியில், மாவட்ட துவக்க விழாவில் ஜெயலலிதா பங்கேற்ற புகைப்படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்ட வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியில், அந்த மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்த ஜெயலலிதா, மாவட்ட துவக்க விழாவில் பங்கேற்ற புகைப்படம் இடம் பெறாதது, வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு சமம்.

உள்ளதை உள்ளபடி சொல்வது தான்வரலாறு. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்குஇடமளிக்க கூடாது. உள்ளதை திரித்துசொல்வது வரலாறு ஆகாது.இக்கண்காட்சி ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. எனவே, மாவட்ட துவக்க விழாவில் ஜெயலலிதா பங்கேற்ற புகைப்படத்தை, கண்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். அந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
22-அக்-202113:10:40 IST Report Abuse
raja வரலாற்றை மாற்றி எழுதுவதுதான் திருட்டு திராவிடத்தின் வேலை.....கையில் காசு இல்லாத நிலையிலும் போலீசில் பிடிபட்டால் பரவாய் இல்லை என்று ஓசி ரயில் ஏறிவந்தது சமூக நீதிக்காக பாடுபட்டு வெற்றியும் கண்டார் கட்டுமரம் என்று வரலாற்றில் வரும் பாருங்களேன்... நமது பட்டிமன்ற தலைவர் இப்படித்தான் திராவிடம் தமிழினம் எழுந்ததுன்னும் ஒரு முன்னுரை கொடுப்பாரு...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
22-அக்-202112:02:06 IST Report Abuse
sankar ஜெயலளிதா பதவ்க்கு வருவதற்கு முன்பு எம்ஜியார், ஜானகியைப் பற்றி எவ்வளவு மட்டமாக பேசினார் என்பது உலகிற்கு நன்றாகத் தெரியும். எம்ஜீயார் ஜெ. போக்கு பிடிக்காமல் தன்னுடன் நடிக்க விடாமல் லதா, மஞ்சுளாவுடன் நடிக்க ஆரம்பித்தார். அதனால் கோபம் கொண்ட ஜெ. வேறு கதியில்லமல் வேறு நடிகர்களுடன் நாயகியாக நடிக்க த் தொடங்கின்னர்.ராஜிவ் காந்திக்கு மூளை இனி வேலை செய்யாது. முதல்வர் பதவி வேண்டும் என்று கடிதம் போட்டார். எம்ஜியார் இறந்தபோது ராணுவவண்டியில் ஏறி செருப்புக் காலோடு தாண்டியபோது, கீழே தள்ளப்பட்டு அனுதாபம் தேடினார். தான் பதவியில் இருந்தபோது எம்ஜியார் படத்தை ஸ்டாம்ப் சைஸ்ல் போடுவார் அல்லது போடாமல் விட்ட்டு விடுவார். நன்றி கொன்றவர் அவர். இதெல்லாம் கனடா தஞ்சை அன்புக்கு தெரியாதா ?.
Rate this:
Cancel
22-அக்-202108:02:41 IST Report Abuse
அப்புசாமி அடப்போங்கய்யா... இந்தியா லெவல்லேயே நேரு போன்றவர்களை ஓரம் கட்டிட்டாங்க... இவுரு அம்மையார் படம் இடம் பெறாததற்கு கவலைப் படுறாரு. வரலாறு வென்றவர்களால், ஆட்சியில் இருப்பவர்களால் எழுதப் படுவது. புரிஞ்சுக்கோங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X