அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்

Added : அக் 22, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஈரோடு:''மின் விவகாரத்திலாவது, வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.ஈரோடில் அண்ணாமலை அளித்த பேட்டி:மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், எம்.பி., கனிமொழியாலும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்.அதன்பின் பலமுறை வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்
 மின் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை  பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்

ஈரோடு:''மின் விவகாரத்திலாவது, வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.ஈரோடில் அண்ணாமலை அளித்த பேட்டி:

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், எம்.பி., கனிமொழியாலும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்.அதன்பின் பலமுறை வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவால், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.இது எப்படி உள்ளது என்றால், அண்டா கரியை பார்த்து அடுப்பு கரிநீ தான் கறுப்பு என்று கூறியது போல் உள்ளது. நாங்கள் கூறியது சிறிய குற்றச்சாட்டு. தமிழகத்தில், தற்காலிகமாக செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதை முறைப்படுத்துவதாக கூறி சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் சில கம்பெனிகளை உயிரூட்ட ஐந்து மாதங்களாக முறைகேடு செய்து வருகின்றனர்.

நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு, மூன்று மாதம் கிடப்பில் போட்டு விட்டு பில்லை கிளியர் செய்ய, 4 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்.தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வரும் ஊழல் தடுப்பு சோதனைகளை, செந்தில் பாலாஜி வீட்டில் மேற்கொள்ள வேண்டும்.இதற்கான ஆவணங்களை, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன். இதில் எந்தெந்த ஒப்பந்ததாரருக்கு எவ்வளவு தொகை பாக்கி உள்ளது எனவும், மொத்தம், 29 கோடி ரூபாய் உள்ளது எனவும் தெரிவித்துஇருந்தேன்.


முக்கிய பொறுப்பு

தி.மு.க.,வில் அனைத்து தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்ட நபர், அதே கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பல முக்கிய பொறுப்புகளை வழங்கி, நல்லவர் என்ற சான்றிதழ் வழங்குவதை மக்கள் ஏற்க மாட்டர். தமிழகம் எப்போதும் 1 யூனிட், 20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியது இல்லை என்று முதலில் கூறினார். அதன்பின் பிற மாநிலங்கள் இந்த விலைக்கு வாங்குவதாக கூறுகிறார். இவர்கள் தான் நிலக்கரி தட்டுப்பாடு என பிரச்னையை துவக்கி வைத்தனர்.

மின் துறை அமைச்சர், கோபாலபுரத்தில் உள்ள தலைவர்களுக்கு, பி.ஜி.ஆர்., எனர்ஜி நிறுவனத்துடன் என்ன தொடர்பு? மின் துறையில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு ஏன் வழங்கப்பட உள்ளது?நலிவடைந்த நிறுவனத்தை உயர்த்துவதற்காக இவர்கள் எதற்கு முயற்சி செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் செந்தில் பாலாஜி பதில் சொல்ல வேண்டும்.

முதல்வர் நேர்மையான ஆட்சியை தருவதாக சொல்வது உண்மையானால், முதல் நேர்மையை செந்தில் பாலாஜியிடம் காட்ட வேண்டும்.கரூரில் இருந்து கோவை வரை உள்ள தொழிலதிபர்களை மிரட்டி வருகின்றனர். கோவைக்கு நான் தான் பொறுப்பு அமைச்சர் எனக் கூறி, செந்தில் பாலாஜி மிரட்டி வருகிறார். கரூரில் துவங்கிய மிரட்டல், ஈரோடு வழியே கோவை வரை பரவி உள்ளது.


தொழிலதிபர்கள்

கொங்கு பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி, தி.மு.க., இப்பகுதிக்கு வந்து விடலாம் என்று நினைக்கின்றனர். இது பகல் கனவு. எப்போதும் நடக்காது.'நீட்'டில் இருந்து துவங்கி, எதற்குமே தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை. மின் விவகாரத்திலாவது வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு அனைத்துமே டிரெய்லர் தான். 2006 -11 ஆட்சி முறையை, தி.மு.க., கையில் எடுக்கக்கூடாது.அடுத்த வாரம் சோலார் மின்சாரம் தொடர்பான முறைகேடுகள், ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durairaj - Kuwait,குவைத்
22-அக்-202122:58:00 IST Report Abuse
Durairaj You are right Mr Annamalai.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-அக்-202121:32:06 IST Report Abuse
Dhurvesh ஹா ஹா இவனை தோற்கடிச்சதிற்கு இந்த XCEL sheet அண்ணாமலை இப்போ ஆட்டம்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
22-அக்-202118:30:28 IST Report Abuse
venkates தெரிந்தே வோட்டை போட்ட மக்களுக்கு ,,,ஊழல் பற்றி கவலையில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X