பொது செய்தி

தமிழ்நாடு

'கறுப்பு ஆடுகள்' மீது நடவடிக்கை பாயுமா திரிசூலத்தில் 83 ஏக்கர் கோவில் நிலம்' கபளீகரம்'

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
திரிசூலம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான, 83.26 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்க, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் சொத்துக்களை மீட்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள், அதற்கு துணை போனவர்கள் மீது, அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 83.26
 கறுப்பு ஆடுகள், நடவடிக்கை பாயுமா? ,*திரிசூலம், 83 ஏக்கர் கோவில் நிலம்' கபளீகரம்'

திரிசூலம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான, 83.26 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்க, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் சொத்துக்களை மீட்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள், அதற்கு துணை போனவர்கள் மீது, அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


83.26 ஏக்கர் நிலம்சென்னை, திரிசூலத்தில் அமைந்துள்ளது திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவில். இக்கோவில் மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள்பாலிக்கின்றனர்.பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமாக, நுாறு ஏக்கருக்கும் மேற்பட்ட பட்டா நிலம் உள்ளது. கோவிலை சுற்றி 83.26 ஏக்கர் நிலம் உள்ளது.

அதில் வரும் வருமானம் வாயிலாக, கோவிலின் நித்திய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பபட்டு வந்தன.
சில ஆண்டுகளுக்கு முன், இக்கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த பின், வழக்கமான நிர்வாக குளறுபடி காரணமாக, கோவிலின் பாரம்பரியம் சிதைந்து போனது. அன்னச்சத்திரங்கள் பாராமரிக்கப்படாமல் பாழடைந்தது.

கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், 21 ஏக்கர் குத்தைகக்கு விடப்பட்டிருந்தது. மீதமுள்ள, 62 ஏக்கர் தரிசு நிலமாக இருந்தது. பின், உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி, கோவில் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைபோனது.கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், கோவிலுக்கு சொந்தமான, 50 ஏக்கர் பட்டா நிலம், கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில் நிலத்தை மீட்கக் கோரி, சேவியர் பெலிக்ஸ் என்பவர் ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
தீவிரம்

அப்போது, கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; கோவில் நிலத்தை குத்தகைக்கு விடப்பட்ட விவரங்கள் குறித்து, அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இது குறித்த தகவல்களை விரிவாக தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில், அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் வட்டம், திரிசூலம் வருவாய் கிராமத்தில், புல எண் 29 முதல், 97 வரை, 83.26 நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன.
சகல வசதி

இதில், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்களால் கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவில் பட்டா நிலத்தை, வெறும்,100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த கோவில் நிர்வாகம், ஊராட்சி, மின்வாரியம் ஆகியவை இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில், சகல வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பல கட்டுமானங்கள் நடந்து வருகின்றன.


கோரிக்கைஅந்த கோவில் நிலத்தை மீட்க தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி சிறப்பாக நடக்கிறது. அதன்படி, ஏராளமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே போல், திரிசூலநாதர் கோவில் நிலமும், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில், அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு, அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி விரைவில் துவங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news

ஒரே நாளில் மின் இணைப்பு!வங்கியில் முறையாக வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவோருக்கே மின் இணைப்பு வழங்க, மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் மின் வாரிய அதிகாரிகள், திரிசூலநாதர் கோவில் பட்டா நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஒரே நாளில் மீட்டருடன் கூடிய மின் இணைப்பு வழங்கியுள்ளனர்.

இதற்கான மாமுலுடன் சேர்த்த கட்டணம், 40 ஆயிரம் ரூபாய். கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின் துறையின் நேர்மையான உயர் அதிகாரிகளை கொண்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டால், கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.
- பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர்


500 சதுர அடி ரூ.5.5 லட்சம் மட்டுமே!


திரிசூலநாதர் கோவில் நிலத்தை, பல குழுவாக ஆக்கிரமித்து விற்பனை செய்துள்ளனர். ஆக்கிரமித்த இடத்திற்கு முதலில் ஊராட்சி உதவியுடன் தார் சாலை, மின்வாரிய உதவியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, 500 சதுர அடி மனைகளாக பிரிக்கப்பட்டது.

ஒரு மனையின் விலை 5.5 லட்சம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 50,000 ரூபாய், இடத்தினை பாதுகாக்கும் ரவுடிகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ஆக்கிரமிப்பாளர், ஊராட்சி, மின்வாரியம் என பகிர்ந்து பிரித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.


latest tamil news

பல துறை 'விளையாட்டு'கோவில் நிலம் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டத்தில், அறநிலையத்துறை முன்னாள் அதிகாரிகள், அலுவலர்களுக்கும் சம்பந்தம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு துறையினர் மட்டுமின்றி, பல துறைகளை சேர்ந்தோர் சேர்ந்து இந்த கூட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட காலகட்டங்களில் அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- -நமது சிறப்பு நிருபர்--

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
22-அக்-202114:18:37 IST Report Abuse
sundarsvpr கோயில் நிலத்தை மீட்பது ஒரு புறம் நடந்தாலும் மறுபுறம் திருக்கோயில்களின் நகைகள் வாகனங்கள் போன்றவை காக்கப்படவேண்டும். இரண்டு பணிகளும் நடக்கவேண்டும். நகைகள் விபர பட்டியல் எடுக்கவேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் சாராத நம்பிக்கைக்குரிய அறங்காவலர் அமைக்கவேண்டும. பக்திக்கு மூட பக்தி சிறந்தது. நிர்வாகத்திற்கு கண்மூடியாய் இருக்கக்கூடாது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-அக்-202113:57:45 IST Report Abuse
Vena Suna திமுக ஆளுங்களா...கொடுமை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-அக்-202112:23:56 IST Report Abuse
Lion Drsekar துணை போனவர்கள் மீது, அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்." சமீபத்தில் சிறுவாச்சூர் கோவிலில் நடந்த சிலைகள் உடைப்பு நிகழ்வில் இந்த துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறியாது. தனியார் பங்குதான் அதிகம், தனியார்கள்தான் மீண்டு வசூலில் இறங்கியிருக்கிறார்கள், கயவர்களை எதிர்த்து கோவில் நிர்வாகம் ஒரு போராட்டமும் செய்யவில்லையே/ அவர்களுக்கு தேவை உண்டியலில் பணம் , தீய சக்திகளில் இருந்து .. எதுவும் நடக்கப்போவது இல்லை. நமது நேரம்தான் விரயம், வந்தே மாதரம்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-அக்-202115:49:39 IST Report Abuse
தமிழ்வேள்தனியார் செலவு செய்து கோவில் அமைத்தால் , அதை அரசு செலவில் செய்ததாக கணக்கெழுதி, காசு முழுங்கும் ஆசாமிகள் இந்த திருட்டு திமுகவினர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X