'கிரே' பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின்
'கிரே' பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது.


latest tamil news



இதன் 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் கடந்த 2018-லிருந்து இடம் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதி உதவி கிடைக்கவில்லை.

கடந்த 2020 அக்டோபரில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில் பாகிஸ்தான் முக்கிய செயல்திட்டங்களை நிறைவேற்றாததால், 'கிரே' நிற பட்டியலில் தொடரும்' என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2022 ஏப்ரல் மாதம் எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மாநாடு துவங்க உள்ளது. இதில் பாகிஸ்தான் தனது செயல்திட்டங்களை சரிவர நிறைவேற்றவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதால், மீண்டும் 'கிரே' பட்டியலில் தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-அக்-202115:44:56 IST Report Abuse
DVRR இப்போது துருக்கியும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது - Latest News
Rate this:
Cancel
Naga Subramanian - Kolkatta,இந்தியா
22-அக்-202114:06:09 IST Report Abuse
Naga Subramanian இந்த கிரே பட்டியல் என்பது பாகிஸ்தானை மிரட்டத்தானே ஒழிய, தீவிரவாதத்தை ஒழிக்க இல்லை என்பதுதான் உண்மை. பல காலமாக கிரே பட்டியலில் இருப்பவரை, கறுப்புப் பட்டியலில் தள்ள என்ன தடுக்கிறது இந்த எப்.ஏ.டி.எப். அமைப்பை. பாகிஸ்தானே இதை பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
22-அக்-202113:32:33 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சீனா பாகிஸ்தானை விட்டுவிடாது , காப்பாற்றும் , ஆப்கானிஸ்தானையும் கூட... தீவிரவாதி நாடுகளுக்கு சொர்க நாடக இருப்பது சீனா தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X