தமிழ்நாடு

'53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு : தடுப்பூசி போட தாமதம் வேண்டாம்!'

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் 53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தாமதிக்காமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஓராண்டுக்கு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். விழிப்புணர்வு சென்னை, ஷெனாய் நகரில், துாய்மை பணியில் உள்ள பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை
'53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு :  தடுப்பூசி போட தாமதம் வேண்டாம்!'

சென்னை : ''தமிழகத்தில் 53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தாமதிக்காமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஓராண்டுக்கு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


விழிப்புணர்வு


சென்னை, ஷெனாய் நகரில், துாய்மை பணியில் உள்ள பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:தொற்று நோய்க்கு கவனம் செலுத்தி வரும் நேரத்தில், துாய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கும் தொற்றா நோய் குறித்தும், நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில், இரண்டாம் தவணை காலம் முடிந்துள்ள 57 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தற்போது 53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தாமதமின்றி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.


latest tamil news





பாதிப்பு



மேலும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த, தேசிய நிபுணர் குழு அனுமதி அளித்த உடன், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.மூன்றாம் அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என்பதால், அரசு வழங்கி உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை, மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.நவ.,1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டும். தொடர் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க செல்லும்போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அடுத்த ஓராண்டுக்கு அனைவரும், கட்டாயம் முககவசம் அணிய
வேண்டும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-அக்-202108:57:16 IST Report Abuse
duruvasar மாசு இல்லேங்கராரு. நீங்க மாஸ் காட்டுறீங்க. இப்ப மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X