இது உங்கள் இடம்: இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

Updated : அக் 23, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (56)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ம.தி.மு.க., கட்சியின் அடுத்த தலைவராக, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் மகன் துரை.வையாபுரி தேர்வு ஆகியுள்ளார். 'இது, தொண்டர்களின் விருப்பப்படி, என் விருப்பம் மீறி நடந்தது' என வைகோ, 'சப்பை கட்டு' கட்டியுள்ளார்.இதே கதையை
Vaiko, MDMK, Durai Vaiyapuri


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ம.தி.மு.க., கட்சியின் அடுத்த தலைவராக, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் மகன் துரை.வையாபுரி தேர்வு ஆகியுள்ளார். 'இது, தொண்டர்களின் விருப்பப்படி, என் விருப்பம் மீறி நடந்தது' என வைகோ, 'சப்பை கட்டு' கட்டியுள்ளார்.


latest tamil news


இதே கதையை தானே, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியும் சொன்னார். தன் மகன் ஸ்டாலினை, தி.மு.க.,வில் வளர்த்தார். அப்போது அதை எதிர்த்ததால் தானே தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். இப்போது அதே தவறை வைகோ செய்யலாமா... வாரிசு அரசியலை நியாயப்படுத்தலாமா?

தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோவிற்காக, ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனரே... அவர்களின் சாம்பல் மீது தானே, ம.தி.மு.க., உருவானது. இன்று, தன் மகனை கட்சியில் அடுத்த தலைவராக உருவாக்கி, எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் வைகோ?


latest tamil news



இவரை நம்பி இருந்த அத்தனை தொண்டர்களுக்கும், தான் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை காட்டி விட்டார். 'அரசியலில் இதெல்லாம் சாதாரணம் பா...' என, காமெடி நடிகர் கவுண்டமணி சொன்னது நிஜமே.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவெனில், தன் மகன் துரை.வையாபுரியுடன் சென்று, மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியலை பின்பற்றும், தி.மு.க.,வின் இளைஞரணி செயலர் உதயநிதியை சந்தித்து, மாலை அணிவித்து வாழ்த்தும் பெறுகிறார் வைகோ! ஐயகோ... அந்தோ பரிதாபம்!


latest tamil news


தாத்தாவை எதிர்த்த தலைவர், அவரது மகனின் வெற்றிக்காக மேடைகளில் முழங்கி, இன்று பேரனுக்கும் அடிபணிந்து வாழ்த்து பெற, காத்திருக்கிறாரே... ம.தி.மு.க., தொண்டர்களுக்கும், தீக்குளித்து மாண்டோருக்கும் இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X