ரூ.8 லட்சம் உச்ச வரம்பு: மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத
EWS quota, NEET admissions,Supreme Court,உச்ச நீதிமன்றம்

புதுடில்லி : மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது.இதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக அந்த பிரிவினருக்கு 8 லட்ச ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடந்த விசாரணையின் போது பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாயை நிர்ணயித்துள்ள பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் நாகரத்னா விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது 8 லட்ச ரூபாய் வருமான உச்ச வரம்பு நிர்ணயித்தது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


latest tamil newsஇதன்பின் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: அரசின் கொள்கை முடிவில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஆனால் எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

ஓ.பி.சி.யினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் வரம்பும் 8 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது அவர்களுக்கும் அந்த பின்னடைவுகளை சந்திக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் ஒரே வரம்பு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?

வருமான உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளதை மறு பரிசீலனை செய்யும் எண்ணம் உள்ளதா என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pudiyavan India - chennai,இந்தியா
22-அக்-202115:28:14 IST Report Abuse
Pudiyavan India The bench passed an order formulating certain issues on which it sought specific responses from the Centre. The issues are : 1. 1. 1.Whether the Centre undertook any exercise before arriving at the criteria to determine EWS. 2.If the answer is affirmative, is the criteria based on Sinho commission report. If so, place the report on record. 3.The income limit for determining creamy layer in OBC and EWS is the same, that is Rs 8 lakhs annual income. In the OBC category, the economically advanced category is excluded as social backwardness diminishes. In such a scenario, whether it would be arbitrary to provide similar income limit for EWS and OBC, as EWS and OBC, as EWS has no concept of social and economic backwardness. 4.Whether difference in rural and urban purchasing power has been accounted for while deriving this limit. 5.On what basis asset exception has been arrived at and has any exercise been undertaken for the same. 6. Reason why residential flat criteria doesn't differentiate b/w metropolitan and non-metropolitan area. The bench observed in the order that the Court must be apprised of on what basis has the EWS income criterion been arrived at.
Rate this:
Cancel
Pudiyavan India - chennai,இந்தியா
22-அக்-202115:21:48 IST Report Abuse
Pudiyavan India below 8 lacs income is economically weaker section. IN OBC above 8 lacs is creamy layer. than which income is middle class. The OBC creamy layer to be increased to 20 lacs as the one lac fixed in 1993 is equal to more than 20 lacs. Also why the EWC 10% quota given only to forwards. it should be shared between all. may be OC 50% will get 5% as EWS SC/ST with 19% will get 2% as EWS OBC with 27% will get 3% as EWS This is fair and social justice
Rate this:
Suri - Chennai,இந்தியா
22-அக்-202118:10:34 IST Report Abuse
SuriCompletely agree...
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
22-அக்-202114:32:41 IST Report Abuse
Suri நில அளவு கிராமபுரத்துக்கும் நகர்புறத்துக்கும் வெவ்வேறு அளவுகளை வரையறுக்க தெரிந்த அரசிற்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு நகர்புறத்துக்கும் கிராமபுரத்துக்கும் அளவு வரையறுக்க தெரியவில்லையா? நகர்புறத்திலேயே எந்த எந்த இடத்தின் விலை எவ்வளவு என்று வழிகாட்டு விலையை அறிவித்து அதற்க்கு தகுந்த பத்திரப்பதிவு கட்டணம் வசூலிக்க தெரிந்த அரசிற்கு இந்த விஷயத்திற்கு மட்டும் வரையறுக்க தெரியவில்லையா? இதன் உள்நோக்கம் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X