தமிழ்நாடு

'எக்ஸ் - ரே' இயந்திரம் பழுது; டாக்டரும் இல்லை; குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்றத்துார்--குன்றத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'எக்ஸ் ரே' இயந்திரம் பழுது, குழந்தை நலம், அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாத காரணங்களால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.குன்றத்துாரில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. குன்றத்துார், கோவூர், தண்டலம், இரண்டாம் கட்டளை, மலையம்பாக்கம், கொல்லச்சேரி, சிறுகளத்துார்
 'எக்ஸ் - ரே' இயந்திரம் பழுது; டாக்டரும் இல்லை;  குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

குன்றத்துார்--குன்றத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'எக்ஸ் ரே' இயந்திரம் பழுது, குழந்தை நலம், அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாத காரணங்களால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

குன்றத்துாரில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. குன்றத்துார், கோவூர், தண்டலம், இரண்டாம் கட்டளை, மலையம்பாக்கம், கொல்லச்சேரி, சிறுகளத்துார் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.100 பிரசவம்தினமும், 200 முதல் 400 பேர், பல்வேறு பிரச்னைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். மாதத்திற்கு, 80 முதல் 100 பிரசவம் பார்க்கப்படுகிறது.கர்ப்பிணி பரிசோதனை, குழந்தை நல மருத்துவம், பல் மருத்துவம், தடுப்பூசி மற்றும் சித்தா பிரிவுகள் உள்ளன.இங்கு, 30 படுக்கை வசதி கொண்ட பிரசவ வார்டும் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவமனையாக, இந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.இப்படிப்பட்ட மருத்துவமனையில், எக்ஸ் -ரே இயந்திரம் பழுதாகி இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதனால், எக்ஸ் - ரே எடுக்க வேண்டிய நோயாளிகள், குரோம்பேட்டை அல்லது சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். குழந்தை நல மருத்துவர் இல்லாததால், பிரசவ வார்டில், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால், வெளியில் இருந்து மருத்துவரை வரவைக்க வேண்டியுள்ளது.மருத்துவ வசதிகள்சில நேரங்களில், குழந்தையை, சென்னைக்கு அனுப்பி விடுகின்றனர். அறுவை சிகிச்சை பிரசவ வார்டு இருந்தும், அறுவை சிகிச்சை மருத்துவரோ, மயக்க மருந்து செலுத்தும் மருத்துவரோ இங்கு இல்லை. ஒவ்வொரு முறையும் வெளியில் இருந்து வரவைக்க வேண்டியுள்ளது

.ஜெனரேட்டர் அடிக்கடி பழுதாகி விடுவதால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில், பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களும், குழந்தைகளும் அவதிப்படுகின்றனர். இதனால், சிகிச்சையிலும் சிக்கல் ஏற்படுகிறது. முக்கியமான மருத்துவமனையில், போதிய வசதிகளும், மருத்துவர்களும் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்துவதுடன், போதிய டாக்டர்களை நியமித்து, உரிய மருத்துவ வசதிகளை செய்து தர, அரசு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-அக்-202111:05:58 IST Report Abuse
duruvasar எக்ஸ்ரே மிசனை சரி செஞ்சிட்டா தனியார் வச்சிருக்கிற கிளினிக்கில் ஆள் குறைப்பு நடக்கும். வேலையில்லா திண்டாட்டதை குறைக்கும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சாயம் பூசாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X