20 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா நன்கொடை

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: வெளிநாடுகளுக்கு 20 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா நன்கொடையாக வழங்கி உள்ளது.அமெரிக்காவில் கொரோனா வைரசால் 4.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7.2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் நன்கொடையாக
US, Corona Vaccine, Covid Vaccine, Vaccine, donate, donation

வாஷிங்டன்: வெளிநாடுகளுக்கு 20 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா நன்கொடையாக வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 4.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7.2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 கோடி தடுப்பூசி டோஸ்களை வெளிநாடுகளுக்கு அமெரிக்கா இதுவரை நன்கொடையாக வழங்கி உள்ளது.இதன் வாயிலாக 100க்கும் மேற்பட்ட நாடுகள் பயனடைந்து உள்ளன. உலக அளவில் தடுப்பூசிகளை அதிகம் நன்கொடை அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.


latest tamil news



இது குறித்து சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பின் அதிகாரி சமந்தா பவர் கூறியதாவது: இந்த 20 கோடி தடுப்பூசி டோஸ்கள், லட்சக்கணக்கான மக்களின் உடல்நலத்தை பாதுகாத்துள்ளதோடு, அவர்களுக்கு நம்பிக்கையும் அளித்துள்ளன. இன்னும் நாங்கள் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகளுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202112:34:11 IST Report Abuse
ஆரூர் ரங் Raman இந்தியாவில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கிய போது 🙄 வீணாவதைத் தடுக்க இந்திய அரசு கூட ஏற்றுமதி செய்து ஏழை நாடுகளுக்கு உதவியது👍 மறக்காது. ஆனால் அப்போது என்ன சொன்னாங்க? நமக்கே இல்லாத போது ஏற்றுமதி ஏன் என்று எதிர்த்தது யார்?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
22-அக்-202105:37:10 IST Report Abuse
Raman எப்போ பாரு சாதனை என்று பீத்திக்கொள்ளும் ஒன்றிய அரசு இன்னைக்கு அமெரிக்கா பிச்சை போட்டிருக்கு.. அடுத்த நாட்டில் பிச்சை எடுத்துவிட்டு எதற்கு சாதனை என்று வீண் பந்தா ? சங்கிகள் ஊளை விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X