மும்பை மாநகராட்சியிடம் ரூ.82 ஆயிரம் கோடி இருப்பு; ஆண்டுக்கு ரூ.1,800 கோடி வட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மும்பை மாநகராட்சியிடம் ரூ.82 ஆயிரம் கோடி இருப்பு; ஆண்டுக்கு ரூ.1,800 கோடி வட்டி

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (12)
Share
மும்பை: மும்பை மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தும், 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையை வைத்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., எனப்படும் பெருநகர மும்பை மாநகராட்சி, நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சியாக விளங்குகிறது.
BMC, Mumbai Corporation, Fixed Deposit, FD

மும்பை: மும்பை மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தும், 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையை வைத்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., எனப்படும் பெருநகர மும்பை மாநகராட்சி, நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சியாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இதன் வருவாய் குறைந்தபோதும், வங்கிகளில் அதற்குள்ள நிலையான வைப்புத் தொகையின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news



மும்பை மாநகராட்சிக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிலையான வைப்பு தொகை உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட அதிகமாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், 343 நிலையான வைப்புத் தொகை கணக்குகளை மும்பை மாநகராட்சி நிர்வகித்து வருவதாகவும், அதன் வாயிலாக ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வட்டி பெறுவதும் தெரிய வந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X