'பலாத்கார வழக்கிலிருந்து விடுதலையாக பெண்ணின் நடத்தையை காரணம் காட்டுவதா'

Added : அக் 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கொச்சி: 'ஒரு பெண்ணின் முந்தைய பாலியல் உறவுகள், ஒழுக்க நடத்தையை காரணம் காட்டி, பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவிக்க முடியாது' என, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.ஆண் குழந்தைகேரளாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில், தான்
Kerala HC, Court, High Court, Kerala High Court, Kerala

கொச்சி: 'ஒரு பெண்ணின் முந்தைய பாலியல் உறவுகள், ஒழுக்க நடத்தையை காரணம் காட்டி, பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவிக்க முடியாது' என, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.


ஆண் குழந்தை


கேரளாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில், தான் பெற்ற மகளையே தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

மகளுக்கு பாதுகாவலராக, ஆதரவாக இருக்க வேண்டிய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளது கொடூரமானது. இது, பாதுகாவலர்களே பணத்தை கொள்ளையடிப்பதை விட மோசமானது. தான் பலாத்காரம் செய்வதற்கு முன், வேறு சிலருடன் மகள் பாலியல் உறவு கொண்டுள்ளதாக தந்தை கூறியுள்ளார். அதனால், தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.


latest tamil news



டி.என்.ஏ., எனப்படும் மரபணு பரிசோதனையில், இவர் தான் மகளின் குழந்தைக்கும் தந்தை என்பது உறுதியாகி உள்ளது. ஒரு பெண்ணின் ஒழுக்க நடத்தை, முந்தைய பாலியல் உறவுகள் போன்றவற்றை காரணமாக கூறி, பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து யாரையும் விடுவிக்க முடியாது. பாலியல் பலாத்காரம் நடந்த நேரத்தில், அவரது மகள் சிறுமி தான் என்பது உறுதி செய்யப்படவில்லை.


14 ஆண்டுகள்


அதனால், 'போக்சோ' சட்டத்தில் விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
22-அக்-202119:28:19 IST Report Abuse
vbs manian இவரும் ஒரு தந்தையா. கலியுகத்தில் சமூக சீர்கேடு உச்சமாகும் என்று எழுதிவைத்திருப்பது சரி என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
22-அக்-202117:43:04 IST Report Abuse
Sidhaarth அவரு பிரம்மா பக்தரா இருப்பாரோ
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-அக்-202115:54:18 IST Report Abuse
sankaseshan சேட்டன்மார்கள் எப்படியெல்லாம் யோசனைபண்ணி வாதாடறாங்க இந்தப்புதிய குழந்தைக்கு பெரியவர் அப்பா வா,தாத்தாவா நம்மவூரு சொரியாரின் கொள்கைகள் கேரளத்தில் நன்கு பின்பற்ற படுகிறது அறிவாளி மன்னருக்கு சொரியாரை உதாரணம் காட்டினால் ஏன் கோபம் வரணும் இது மாதிரி அவர்தான் முன்னோடி வழிகாட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X