பொது செய்தி

தமிழ்நாடு

'மாமூல்' பட்டியல் வெளியீடு: எஸ்.பி.,க்கு வாழ்த்து போஸ்டர்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சேலம் : போலீசாரின் மாமூல் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த, சேலம் எஸ்.பி.,யை பாராட்டி பல்வேறு அமைப்புகள், 'போஸ்டர்' ஒட்டின. அதை போலீசாரே, இரவோடு இரவாக கிழித்தனர்.சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வசூலிக்கும், 'மாமூல்' பட்டியலை வெளியிட்டு எச்சரித்தார். இது, 'தினமலர்' நாளிதழ் மற்றும் பல்வேறு சமூக
Police, SP, Salem

சேலம் : போலீசாரின் மாமூல் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த, சேலம் எஸ்.பி.,யை பாராட்டி பல்வேறு அமைப்புகள், 'போஸ்டர்' ஒட்டின. அதை போலீசாரே, இரவோடு இரவாக கிழித்தனர்.

சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வசூலிக்கும், 'மாமூல்' பட்டியலை வெளியிட்டு எச்சரித்தார். இது, 'தினமலர்' நாளிதழ் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகியது .எஸ்.பி., செயலை பாராட்டி, சேலம் மாநகர் முழுதும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், 'போஸ்டர்' ஒட்டினர்.


latest tamil news



அதிர்ச்சி அடைந்த போலீசார், போஸ்டர்களை இரவோடு இரவாக கிழித்தனர். ஆத்துார், வாழப்பாடி, ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மட்டுமின்றி, பொதுமக்கள், பொதுநல அமைப்பினரும், எஸ்.பி.,யை பாராட்டி ஒட்டிய போஸ்டர்களை, போலீசாரே இரவோடு இரவாக கிழித்து அகற்றினர்.

இருப்பினும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், எஸ்.பி.,யின் செயலை பாராட்டி, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
22-அக்-202114:56:54 IST Report Abuse
J.Isaac இதைபோல் பத்திரபதிவு துறை, வட்டார போக்குவரத்து துறை பற்றியும் லஞ்ச பட்டியல் வெளிவந்தால் நல்லது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-அக்-202114:26:07 IST Report Abuse
Lion Drsekar நல்ல மனிதர் அவரை இந்த உலகம் மனதார என்றென்றும் பாராட்டு, மேலும் நடவடிக்கை எடுத்து மக்களைக்காப்பற்றினால் இவ்வையகம் இருக்கும்வரை போற்றும், எல்லாம் இருந்தும் தேர்தல் வெற்றி இவைகள்தான் ஜனனயாத்தின் தூண்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202113:17:38 IST Report Abuse
vpurushothaman வேலியே பயிரை மேய்வது ஊரறிந்த விஷயம். மாவட்ட காவல் துறையையே கையில் வைத்துக் கொண்டு தேர்தலின் போது ஒரு அமைச்சரே செயல்பட்டது வெட்ட வெளிச்சமாக இருந்ததே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X