மாமூல் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.,க்கு வாழ்த்து போஸ்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாமூல்' பட்டியல் வெளியீடு: எஸ்.பி.,க்கு வாழ்த்து போஸ்டர்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (14)
Share
சேலம் : போலீசாரின் மாமூல் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த, சேலம் எஸ்.பி.,யை பாராட்டி பல்வேறு அமைப்புகள், 'போஸ்டர்' ஒட்டின. அதை போலீசாரே, இரவோடு இரவாக கிழித்தனர்.சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வசூலிக்கும், 'மாமூல்' பட்டியலை வெளியிட்டு எச்சரித்தார். இது, 'தினமலர்' நாளிதழ் மற்றும் பல்வேறு சமூக
Police, SP, Salem

சேலம் : போலீசாரின் மாமூல் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த, சேலம் எஸ்.பி.,யை பாராட்டி பல்வேறு அமைப்புகள், 'போஸ்டர்' ஒட்டின. அதை போலீசாரே, இரவோடு இரவாக கிழித்தனர்.

சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வசூலிக்கும், 'மாமூல்' பட்டியலை வெளியிட்டு எச்சரித்தார். இது, 'தினமலர்' நாளிதழ் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகியது .எஸ்.பி., செயலை பாராட்டி, சேலம் மாநகர் முழுதும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், 'போஸ்டர்' ஒட்டினர்.


latest tamil news



அதிர்ச்சி அடைந்த போலீசார், போஸ்டர்களை இரவோடு இரவாக கிழித்தனர். ஆத்துார், வாழப்பாடி, ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மட்டுமின்றி, பொதுமக்கள், பொதுநல அமைப்பினரும், எஸ்.பி.,யை பாராட்டி ஒட்டிய போஸ்டர்களை, போலீசாரே இரவோடு இரவாக கிழித்து அகற்றினர்.

இருப்பினும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், எஸ்.பி.,யின் செயலை பாராட்டி, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X