சென்னை: முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கூடவே இருந்து பணியாற்றி, நிறைய நல்ல விஷயங்களை, துறையில் செய்து கொடுத்தவர் அந்த அசோக வரத அதிகாரி.
அதனாலேயே, உள்ளாட்சித் துறையில் நிறைய நல்ல பெயரை, அப்போதைக்கு துணை முதல்வராகவும் இருந்த ஸ்டாலின் பெற்றாராம். ஓய்வு பெற்ற அந்த அதிகாரி, கனடாவில், 'செட்டில்' ஆனார்.
![]()
|
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்து, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், நிறைய வகுப்பெடுத்தார்.அவர் ஆலோசனைப்படியே, ஆட்சி நிர்வாகத்தில் நிறைய விஷயங்கள் செய்யப்பட்டன. அதற்காக, சென்னையில் மறுபடி 'செட்டில்' ஆகலாம் என்ற முடிவெடுத்தார். ஆனால், சமீப நாட்களாக அந்த அதிகாரி, தான் நினைத்தபடி ஆட்சி நிர்வாகம் செல்லவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால், தொடர்ந்து ஆலோசனை வழங்குவதில் இருந்து ஒதுங்குவதாக தகவல்.
'கடந்த கால தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காகவே, பக்கபலமாக இருக்க முயன்றேன். போகிற போக்கு பிடிக்கவில்லை' என்கிறார்.