கோவை;''கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக ஓடும். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,'' என்று பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தால் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.முன்னோர் இறைவனுக்கு தானமாக கொடுத்த, பாரம்பரிய ஆபரணங்களை ஒருபோதும் உருக்கி அழித்து தங்க கட்டிகளாக மாற்றக்கூடாது. இது பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல்.கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக கரைபுரண்டோடும். பலரும் மூழ்குவர். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கமிஷனரிடம் புகார்கோவை போலீஸ் கமிஷனரிடம் இப்ராஹிம் அளித்த மனுவில், பேஸ்புக்கில் இரு நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.