பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் இலவச அரிசி; கள்ளச்சந்தையில் விற்பனை

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழக ரேஷன் கடைகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கூடுதல் இலவச அரிசியை, வியாபாரிகள் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.பல மாநிலங்களில், கொரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க, ஏப்., மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், 'கரிப் கல்யாண்' திட்டத்தில், மே, ஜூனில், ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்குவதுடன்,
Garib Kalyan Yojana, Free Rice, Tamilnadu, Black Market, Sale, இலவச அரிசி, மத்திய அரசு, தமிழகம், கள்ளச்சந்தை, விற்பனை

சென்னை: தமிழக ரேஷன் கடைகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கூடுதல் இலவச அரிசியை, வியாபாரிகள் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பல மாநிலங்களில், கொரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க, ஏப்., மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், 'கரிப் கல்யாண்' திட்டத்தில், மே, ஜூனில், ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்குவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா, 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.பின், கூடுதல் இலவச அரிசி வழங்கும் திட்டம் நவ., வரை நீட்டிக்கப்பட்டது.


latest tamil news


இதற்காக, இந்திய உணவு கழகத்தில் இருந்து, தமிழகத்திற்கு மாதம் 1.78 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.சட்டசபை தேர்தலால், தமிழகத்தில் ஜூன் முதல் கூடுதல் இலவச அரிசி வினியோகம் துவங்கியது. அம்மாதமும், ஜூலையிலும் முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருடன், முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கும் சேர்த்து, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா, 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

அதில், முன்னுரிமையற்ற பிரிவு செலவை தமிழக அரசு ஏற்றது. ஆக., முதல் முன்னுரிமை, அந்தியோதயா பிரிவுக்கு மட்டும், மத்திய அரசின் கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி வினியோகம் குறித்து, தற்போது பலருக்கு தெரிவதில்லை.இதனால் கடை ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத அரிசியை, கள்ளச்சந்தையில் விற்கின்றனர். அவற்றை வியாபாரிகள் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
22-அக்-202118:49:10 IST Report Abuse
Soumya விடியலுக்கும் விடியலோட 133.கூட்டு கழவானிகளுக்கும் திருடுவது தானே குலத்தொழில்
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
22-அக்-202118:01:38 IST Report Abuse
LAX ரேஷன்கடைகளில் மத்திய அரசு தீபாவளி வரை கூடுதல் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது பற்றி கேட்டால்.. அப்படி தங்களுக்கு எந்த செய்தியும்/பொருட்களும் வரவில்லை என்கின்றனர்.. TNPDS தளத்தில் login செய்து பார்க்கும்போது எங்கள் அட்டைக்கு கூடுதலான அளவு பொருட்கள் காண்பிக்கிறதே என்றாலும்.. தங்களுக்கு குறைந்த அளவுமட்டுமே மாநில அரசால் வழங்கப்படுவதாகவும்.. அதைத்தான் தாங்கள் கார்டுதாரர்களுக்கு வழங்குவதாகவும்.. TNPDS தளத்தில் குறிப்பிடபபடும் அளவுகள் தங்களுக்கு அரசாங்கத்தால் அனுப்பப்படுவதில்லை என்றும் 'அ'நியாயவிலை கடைக்காரர்கள் சொல்கின்றனர்..
Rate this:
Cancel
22-அக்-202116:55:44 IST Report Abuse
இறைவி கிராமங்களில் இந்த அரிசியை கிலோ ஐந்து ரூபாய் என்று வீடு வீடாக வந்து சிறிய லாரிகளில் வாங்கி செல்கின்றனர். அரிசி கொள்ளை வெகு காலமாக நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X