மறைமுக தேர்தல்: மதுராந்தகம், ஆலங்காயத்தில் திமுக.,வினர் மோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மறைமுக தேர்தல்: மதுராந்தகம், ஆலங்காயத்தில் திமுக.,வினர் மோதல்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை: ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,178 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இன்று (அக்.,22) மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும்
மறைமுக தேர்தல்: மதுராந்தகம், ஆலங்காயத்தில் திமுக.,வினர் மோதல்

சென்னை: ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,178 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இன்று (அக்.,22) மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, 153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,002 ஊராட்சி தலைவர்கள், 23 ஆயிரத்து 185 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news
இவர்கள் வாயிலாக, ஒன்பது மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள்; 79 ஒன்றியக் குழு தலைவர், 79 துணைத் தலைவர்கள்; 3,002 ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான மறைமுக தேர்தல், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இன்று நடந்தது.


22 வயது பெண்


நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவராக 22 வயதான ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.,வை சேர்ந்த இவர், 19 வது வார்டில் வெற்றி பெற்றவர். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், ஸ்ரீலேகா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க.,வினர் இரண்டு பேர் போட்டியிட்டனர். அதிகாப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் குழுவினருக்கும், மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் நேரம் துவங்கி, நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


மோதல்


மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றவதில், தி.மு.க.,வினர் இரு பிரிவினர் மோதல் ஏற்பட்டது. அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.


போட்டி


தென்காசி மாவட்ட பஞ்சாயத்து பதவிக்கு தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற தமிழ்செல்வி, கனிமொழி இடையே போட்டி ஏற்பட்டது. ஓட்டெடுப்பில் தமிழ்செல்வி வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


தள்ளிவைப்பு


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி, பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி, கடந்த செப்டம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பின், நெமிலி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவியை பட்டியலின, பழங்குடியினருக்கும், பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கும், பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கி, அக்டோபர் 12ம் தேதி தேர்தல் அலுவலரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, நெமிலி பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற மனோகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏழு நாட்கள் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து புதிய அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்தை அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தனர்.இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஞ்சாயத்து யூனியனில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நாளை நடைபெற இருந்த மறைமுக தேர்தல் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது


ஜெயந்தி வெற்றிlatest tamil news


ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி,ஒன்றிய தலைவர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான மறைமுகதேர்தல் நடந்து வருகிறது. அதில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது. அதில் 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயந்தி திருமூர்த்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஜெயந்தி மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார் அவருக்கு மாவட்ட ஆட்சியர் பஸ்கரப்பாண்டியன் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.


தி.மு.க.,வினர் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இங்கு 18 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 11 திமுகவை சேர்ந்தவர்கள் தலைவர் பதவிக்கு காயத்திரி என்பவரும் சங்கீதா என்பவரும் திமுகவைச் சேர்ந்த இருவரும் போட்டியிட்டனர். இதில் காயத்திரி ஐந்து பேரும் சங்கீதாவுக்கு ஆறு பேரும் ஆதரவு தெரிவித்தனர். 12 பேர் ஆதரவைப் பெற்றவர்கள் தான் வெற்றி பெற முடியும். இதனால் இது திமுகவை தான் இருக்கும் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் சங்கீதாவுக்கு திமுகவைச் சேர்ந்த 6, பேர் அ.தி.மு.க.,வை சேர்ந்த 4 பேர் பா.ம.க.,வை சேர்ந்த 2 பேர் சுயச்சை ஒருத்தர் ஒருவர் என 12 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் தி.மு.க.,வைச் சேர்ந்த காயத்திரியின் ஆதரவாளர்கள் 5 பேர் ஓட்டு போடவில்லை. ஆனால் தேர்தல் நடத்தி முடிவை அறிவித்ததை கண்டித்து திமுகவைச் சேர்ந்த காயத்திரியின் ஆதரவாளர்கள் இன்று ஆலங்காயம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பேர்ணாம்பட்டு சேர்ந்த சத்திய திருநாவுக்கரசு என்பவர் தீக்குளிக்க முயன்ற போது போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மேலும் 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வேலூர் எம்.பி., கதிர் ஆனந்த் சொல்லித்தான் அ.தி.மு.க., ஆதரவோடு சங்கீதா வெற்றிபெற்றதாக கூறி கதிர் ஆனந்தை கண்டித்து உறுப்பினர் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை கலைக்க முயன்ற போது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி செய்து அவர்களை கலைத்தனர். தி.மு.க.,வினருக்குள் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஆலங்காயம் ஜமுனாமுத்தூர் பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க.,வுக்கு துரோகம் செய்ததாகவும் அ.தி.மு.க.,வுக்கு கைக்கூலியாக மாறியதாகவும் கூறி கதிர் ஆனந்தையும் தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனி வேல் மற்றும் ஞானவேல் ஆகியோரை எதிர்த்து தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர் காயத்ரி ஆதவாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


புறக்கணிப்பு

கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், தலைவர் (அதிமுக) சாந்தி அசோகன் தலைமையில் நடந்தது. மறைமுக தேர்தலை, தி.மு.க., கூட்டணிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களை் அடைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள திமுகவினர், விரைவில் திமுகவில் இணைவார்கள் என, திமுக கவுன்சிலர் ராஜன் தெரிவித்தார்.

துணை தலைவர் தேர்தலை தள்ளிவைக்க, கலெக்டர் சமீரனிடம், திமுக கவுன்சிலர்கள் முறையீட்டனர். தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்கிறேன். கமிஷனரின் அறிவுரைக்கேற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் சமீரன் உறுதியளித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X