12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை ( 22.10.2021 - 28.10.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்செவ்வாய், சந்திரன் சாதக நிலையில் உள்ளனர். சூரியபகவான் வழிபாடு நலம் அளிக்கும்.அசுவினி: வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். பள்ளி கல்லுாரி நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.
வாரபலன், ராசிபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 22.10.2021 - 28.10.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


செவ்வாய், சந்திரன் சாதக நிலையில் உள்ளனர். சூரியபகவான் வழிபாடு நலம் அளிக்கும்.
அசுவினி: வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். பள்ளி கல்லுாரி நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். காதல் சம்பந்தமான மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும்.
பரணி: குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் நன்மைகள் சேரும். கணவர், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கார்த்திகை, 1ம் பாதம்: உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டு பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் யாருக்கேனும் மருத்துவச் செலவு ஏற்படலாம்.


ரிஷபம்


latest tamil news


புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். பிரயாணங்களால் செலவு ஏற்படலாம். நிலம் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம். பங்குச் சந்தையில் நிதானமாக ஈடுபடுங்கள்.
ரோகிணி: குழந்தைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு. பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தொழில்செய்பவர்கள், போதியவாய்ப்பைப்பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர்கள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.


மிதுனம்


ராகு, கேது, புதன் நன்மைகளை வழங்குவர். சாய்பாபா வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3,4: வீட்டைச் சீர்செய்யத் திட்டங்கள் போடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புத்திர பாக்கியம் வேண்டியவர்களின் கனவு நனவாகும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
திருவாதிரை: உடல்நிலை மிக லேசாக பாதிக்கப்படலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். நண்பர்களை மகிழ்வித்து மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில நேரங்களில் அமைதியும், சில நேரங்களில் சலசலப்பும் இருக்கத்தான் செய்யும். வெளிநாடு, உள்நாட்டில் உள்ள உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.


கடகம்


குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். முருகன் வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: பொருளாதாரத்தில் இதுவரை இருந்த சிக்கல்கள் மெல்ல விடுபடும். தனிப்பட்ட வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வர். அனைவரிடமும் கவனமாகப் பேசுங்கள்.
பூசம்: வீடு, நிலம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். புதிய தொழில் தொடங்குவோர் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.
ஆயில்யம்: நண்பர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். உறவினர்களின் வழியில் கூடுதல் செலவு ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்னையால் உடல்நிலை பாதிக்கலாம்.


சிம்மம்


latest tamil news


சனி, புதன், சுக்கிரன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். குருபகவான் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: கணவரின்/ மனைவியின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். சுப செலவுகள் ஏற்படும். புதிய வாகன சேர்க்கை ஏற்படும். பெண்கள் தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவர். வியாபாரிகளுக்கு தன வரவு திருப்தி தரும்.
பூரம்: பெற்றோரின் உடல் நலன் சீராக இருக்கும். பணியாளர்கள் உடன் வேலை பார்ப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். சுப நிகழ்ச்சிகள் தடை நீங்கி நடைபெறும்.
உத்திரம் 1: குழந்தைகள்வழியில் கூடுதல் செலவு ஏற்படும். பெற்றோரின் உடல் நிலை திருப்தி தரும். தவறான வழியில் கவன சிதறல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.


கன்னி


குரு, கேது புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். சிவன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: கடன் பிரச்னை சற்றே குறையத் தொடங்கும். பணியாளர்களின் வாழ்வில் நல்ல திருப்பம் வந்து சேரும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வர்.
அஸ்தம்: திட்டமிட்ட செயல்கள் தாமதமாகும். குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. தன வரவு திருப்தி தரும். பழைய கடன்கள் அடைபடும். தம்பதியரிடையே இணக்கம் ஏற்படும்.
சித்திரை 1,2: முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர், நண்பர்கள் பல வழிகளில் உதவுவர்.
சந்திராஷ்டமம்: 22.10.2021 காலை 6:00 மணி - 22.10.2021 இரவு 2:04 மணி


துலாம்


சுக்கிரன், குரு கூடுதல் நற்பலன்களை தருவர் மகாலட்சுமி வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை 3,4: குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறையும். சுபநிகழ்ச்சி சம்பந்தமான பேச்சுக்கள் நடக்கும். குழந்தைகள் மூலம் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே சுமூக நிலை காணப்படும்.
சுவாதி: அதிக நற்பலன் எதிர்பார்க்க முடியாத வாரம் இது. பணியாளர்கள் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: உடல்நலக்குறைவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை அவசியம். வாகன வகையில் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் உதவுவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 22.10.2021 இரவு 2:05 மணி - 25.10.2021 பகல் 1:46 மணி


விருச்சிகம்


சனி புதன் அற்புதப் பலனைத் தருவர். ராமர் வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: செலவுகள் குறையும். நிறைவோடு இருப்பீர்கள். தொலைத்தொடர்பு அனுகூலம் தரும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகளைச் சற்று தள்ளிவைக்கவும். போட்டியாளர்களை சமாளிக்க நேரிடும்.
அனுஷம்: பிள்ளைகளின் செயல்பாட்டால் டென்ஷன் அதிகரிக்கும். சருமப் பாதுகாப்பில் கவனமாக இருங்கள். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் சூழ்நிலை ஏற்படலாம்.
கேட்டை: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். மன தைரியத்தைக் கைவிட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 25.10.2021 பகல் 1:47 மணி - 27.10.2021 இரவு 12:48 மணி


தனுசு


சூரியன், செவ்வாய், கேது நற்பலன்களை வழங்குவர். வீரபத்திரர் வழிபாடு நலம் தரும்.
மூலம்: கற்பனை பயம் காரணமாகத் துாக்கம் குறையும். மலைபோல் வரும் சிரமம் பனி போல் நீங்கும். உங்கள் வாழ்வுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி கிடைப்பார். குடும்பத்தில் ஒருவர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் தங்கும் நிலை ஏற்படும்.
பூராடம்: வசிப்பிடத்தை மாற்ற உகந்த நேரம் அல்ல. நீங்கள் மதிக்கும் நபர் ஒருவர் உங்களை மகிழ்ந்து பாராட்டுவார். முன்னேற்றத்தில் நிதானப்போக்கு இருக்கும்.
உத்திராடம் 1: வெளியில் சிரித்துப் பேசி உள்ளுக்குள் வெறுக்கும் நபரை இனம் காண்பீர்கள். உணவுப் பழக்கத்தில் எச்சரிக்கை தேவை. ஆரோக்யமற்ற வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 27.10.2021 இரவு 12:49 மணி - 28 நாள் முழுவதும்


மகரம்


சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். ஐயப்பன் வழிபாடு வளம் தரும்.
உத்திராடம் 2,3,4: சகோதர சகோதரிக்கு உதவுவீர்கள். சொத்து பிரச்னை தீரும். தாய்வழி உறவினரிடையே இருந்த பிரச்னை நீங்கும். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
திருவோணம்: அரசு சம்பந்தமான விஷயங்களில் இருந்த தேக்க நிலை மாறும். குலதெய்வப் பிரார்த்தனைகள், மனநிறைவு தரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: உங்கள் மனதை வாட்டிய பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். கவுரவப்பதவிகள் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். அக்கம்பக்கத்தாருடன் இருந்த மோதல்கள் விலகும். வழக்குகள் வெற்றி பெறும்.


கும்பம்


குரு, சூரியன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும் கருடன் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: குடும்பத்தில் குழப்பங்கள் உருவானாலும் அவை நல்ல முறையில் தீரும். டென்ஷன், கனவுத்தொல்லை தீரும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
சதயம்: நிறைய உழைத்து லாபம் காண்பீர்கள். சுபசெலவுகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: பாஸ்போர்ட், விசா பெறுவதில் இருந்த சிரமங்கள் தீரும். கவலைகள் மறையும். உற்சாகமான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.


மீனம்


குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன் வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: சுபச்செலவால் மகிழ்வீர்கள். தாயாரின் தேவையை நிறைவேற்றி ஆசியை பெறுவீர்கள். குழந்தைகளின் கலைத் திறமை வெளிப்படும். சமூகத்தில் கவுரவம் கூடும்.
உத்திரட்டாதி: குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர் அல்லது சகோதரிக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பங்காளிச் சண்டைகள் மறையும்.
ரேவதி: புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். விருப்ப ஓய்வு பெறும் எண்ணம் வரும். நிதி நிலைமை மேம்படும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கற்பீர்கள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X