ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் வழக்கு: நண்பரிடம் விசாரணை - Jayalalitha | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் வழக்கு: நண்பரிடம் விசாரணை

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (4)
Share
ஆத்தூர் : ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக, ஆத்தூரில் வசிக்கும் அவரது நண்பரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக
ஜெயலலிதா, கார் ஓட்டுனர், கனகராஜ், மரணம் வழக்கு, விசாரணை

ஆத்தூர் : ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக, ஆத்தூரில் வசிக்கும் அவரது நண்பரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார்.


latest tamil news




இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையை நேற்று தொடங்கினார். இது தொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்தனர் .

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீசார் வந்தனர். பின்னர் இவர்கள் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு சக்தி நகர் பகுதியில் வசிக்கும் கனகராஜின் நண்பர் ரமேஷ் வீட்டிற்கு இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர் . பின்னர் சுரேஷின் இல்லத்திற்குள் தனிப்படை போலீசார் சென்று விசாரணை செய்தனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X