பொது செய்தி

இந்தியா

100 கோடி ‛டோஸ்' தடுப்பூசி சாதனை; டுவிட்டரில் டி.பி.,யை மாற்றிய பிரதமர்

Added : அக் 22, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' வழங்கி, இந்தியா புதிய சாதனையை நேற்று (அக்.,21) படைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு
100 Crore Vaccination, PM Modi, Changes, Twitter Profile Picture, Congratulations India, Message, தடுப்பூசி, டோஸ், பிரதமர், மோடி, டுவிட்டர், பிரொபைல் பிக்சர்,

புதுடில்லி: இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' வழங்கி, இந்தியா புதிய சாதனையை நேற்று (அக்.,21) படைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. ''இந்த வரலாற்று சாதனையை எட்டுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். இந்த சுயவிவரப் படமானது, கோவிட் தடுப்பூசி குப்பியுடன் ‛வாழ்த்துகள் இந்தியா' எனக் குறிப்பிடும் வகையில் இருந்தது.

இந்தியா, 10 கோடி தடுப்பூசி இலக்கை அடைய 85 நாட்களும், 10 முதல் 20 கோடி இலக்கை கடக்க 45 நாட்களும், 20 முதல் 30 கோடி டோஸ் இலக்கை அடைய 29 நாட்களும் ஆகிய நிலையில், 40 கோடி இலக்கை 24 நாட்களிலும், 50 கோடி டோஸ் இலக்கை 20 நாட்களிலும் எட்டின. 50 கோடி டோஸ் என்னும் மைல்கல் ஆக.,6ம் தேதி எட்டிய நிலையில் 50 முதல் 100 கோடி டோஸ் என்னும் மகத்தான சாதனையை வெறும் 76 நாட்களில் அடைந்து உலகளவில் சாதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-202109:39:11 IST Report Abuse
rajan பிரதமரின் உரையைக் கேட்டேன். எந்த இடத்திலும் எனது தலைமையிலான அரசு என்றோ, பாஜக அரசு என்றோ, ஒரு இடத்திலும் கூறவில்லை. அது மட்டுமில்லாமல், 100கோடி தடுப்பூசி செலுத்தியது தனது அரசின் சாதனை என்றோ கூட குறிப்பிடவில்லை.அனைத்து பெருமைகளும், இந்த தேச விஞ்ஞானிகள், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கே உரியது என்று பாராட்டினார்.அவரது பேச்சில் பாரதம், பாரதத்தின் பெருமை போன்றவற்றை மட்டுமே குறிப்பிட்டார்.தனது அரசின் சாதனைகளை கூட, மற்றவர்களுக்கானது என்று கூற மிகப் பெரிய மனோ தைரியம் வேண்டும். இன்றைய அரசியல்வாதிகளில், நான் மோடி அவர்களிடம் மட்டுமே இதை காண்கிறேன்.பாரத தேசம் பெற்றெடுத்த தவப் புதல்வன், பிரதமர் நரேந்திர மோடி.: இங்குள்ள சொம்பு தூக்கி channel களுக்கோ, ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் கொத்தடிமை கூட்டணி கட்சிகளுக்கோ மோடியை பாராட்ட மனமில்லை.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
24-அக்-202101:06:40 IST Report Abuse
Barakat Aliதனது அரசின் சாதனைகளை பொதுவில் வைக்க மனோதைரியம் அல்ல, பரந்த மனப்பான்மையே தேவை அது அவரிடம் இருக்கிறது...
Rate this:
Cancel
22-அக்-202116:37:53 IST Report Abuse
Kulasekaran A PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
22-அக்-202116:38:02 IST Report Abuse
Kulasekaran A இரண்டாம் அலையில் ஏற்பட்ட லட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கும்பொறுப்பேற்க முன்வரவேண்டும்
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
22-அக்-202118:15:10 IST Report Abuse
Barakat Aliஉங்களுக்கு வயதுக்கு தகுந்த முதிர்ச்சி வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X