100 கோடி ‛டோஸ் தடுப்பூசி சாதனை; டுவிட்டரில் டி.பி.,யை மாற்றிய பிரதமர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

100 கோடி ‛டோஸ்' தடுப்பூசி சாதனை; டுவிட்டரில் டி.பி.,யை மாற்றிய பிரதமர்

Added : அக் 22, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி: இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' வழங்கி, இந்தியா புதிய சாதனையை நேற்று (அக்.,21) படைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு
100 Crore Vaccination, PM Modi, Changes, Twitter Profile Picture, Congratulations India, Message, தடுப்பூசி, டோஸ், பிரதமர், மோடி, டுவிட்டர், பிரொபைல் பிக்சர்,

புதுடில்லி: இந்தியாவில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' வழங்கி, இந்தியா புதிய சாதனையை நேற்று (அக்.,21) படைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. ''இந்த வரலாற்று சாதனையை எட்டுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். இந்த சுயவிவரப் படமானது, கோவிட் தடுப்பூசி குப்பியுடன் ‛வாழ்த்துகள் இந்தியா' எனக் குறிப்பிடும் வகையில் இருந்தது.

இந்தியா, 10 கோடி தடுப்பூசி இலக்கை அடைய 85 நாட்களும், 10 முதல் 20 கோடி இலக்கை கடக்க 45 நாட்களும், 20 முதல் 30 கோடி டோஸ் இலக்கை அடைய 29 நாட்களும் ஆகிய நிலையில், 40 கோடி இலக்கை 24 நாட்களிலும், 50 கோடி டோஸ் இலக்கை 20 நாட்களிலும் எட்டின. 50 கோடி டோஸ் என்னும் மைல்கல் ஆக.,6ம் தேதி எட்டிய நிலையில் 50 முதல் 100 கோடி டோஸ் என்னும் மகத்தான சாதனையை வெறும் 76 நாட்களில் அடைந்து உலகளவில் சாதித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X