மும்பையில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ: 19 மாடியில் இருந்து தப்பிக்க குதித்தவர் பலி

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021
Share
Advertisement
மும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் 19வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மஹாராஷ்டிரா தலைவர் மும்பையின் கியூரி சாலையில் உள்ள அவிக்னா பார்க் அடுக்குமாடி
மும்பை, அடுக்குமாடி கட்டடம், தீ

மும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் 19வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மஹாராஷ்டிரா தலைவர் மும்பையின் கியூரி சாலையில் உள்ள அவிக்னா பார்க் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 19வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கட்டடத்தில் பலர் சக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தின்போது 19வது மாடியில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்தார். அப்போது தீ அதிகமானதை அடுத்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே சேதம் குறித்த தகவல்கள் தெரியவரும்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X