கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: அரசு முடிவு; மக்கள் வரவேற்பு

Updated : அக் 23, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
சென்னை: ஹிந்து அறநிலையத்துறையின் நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்,
ஹிந்து, அறநிலையத்துறை, கல்லூரி, ஹிந்துக்கள்,வேலை, தமிழக அரசு, விளக்கம்

சென்னை: ஹிந்து அறநிலையத்துறையின் நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த அக்.,13ல் விளம்பரம் வெளியிட்ட விளம்பரத்தில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், ஹிந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.


மக்கள் வரவேற்பு


உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த விளக்கத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
23-அக்-202114:30:37 IST Report Abuse
Raj தமிழகத்தின் வேலைவாய்ப்புகளை தமிழ் நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-அக்-202111:59:15 IST Report Abuse
S. Narayanan இது சாதி மத வேறுபாடுகளை மேலும் ஊக்குவிக்கும். அதனானல் மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் சாதிக்கலவரம் ஏற்பட்டு மக்கள் நிம்மதி இழப்பர். இது மக்களுக்கு கேடு விளைவிக்கும். இந்திய அளவில் இந்தியன் என்றும் தமிழக அளவில் தமிழன் என்ற ஒற்றுமை தான் நம் நாட்டிற்கு பலத்தை கொடுக்கும். மக்கள் வேறுபாட்டால் அந்நிய பிரிவினை வாதிகள் இந்தியாவை துண்டாடி விடும் அபாயம் ஏற்படும். தமிழர்கள் அனைவரும் சமம் அனைவரும் தமிழக அரசின் பணி மற்றும் பொது துறை மற்றும் தனியார் இங்கு வேண்டுமானாலும் தகுதி அடிப்படையில் வேலை செய்வதை தான் ஒரு உண்மையான அரசு மக்களுக்கு காட்டும் சரியான வழி. இங்கு தமிழ் படித்தாலும் அரசில் அனைவருக்கும் பணி கிடைக்காது. தனியார் நிறுவனத்தில் பணி புரிய நிச்சயம் ஆங்கிலம் தேவை. இவர்கள் கூற்று படி தமிழ் மட்டும் தெரிந்தவர் இந்து கல்லூரியில் பணி செய்ய முடியுமா. ஆக தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்து தமிழ் நாட்டிலோ அல்லது வேறு எங்காவது அவர்கள் நினைத்த படி வேலை செய்யலாம் என்பது தான் சரியான தீர்வாக இருக்கும். ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-அக்-202111:54:42 IST Report Abuse
Anand பொறுத்திருங்கள், அடுத்த வாய்தாவின் பொது மேற்படி அந்த வழக்கறிஞர் மாற்றப்படலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X