தலைமறைவானவருக்கு முன் ஜாமின் கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Added : அக் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது' என கூறி, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.வர்த்தகம் தொடர்பான மோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி

புதுடில்லி : 'மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது' என கூறி, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வர்த்தகம் தொடர்பான மோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு விபரம்:
ஒருவர் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தாலோ அல்லது அறிவிக்கப்பட்ட குற்றவாளி என பிரகடனம் செய்யப்பட்டிருந்தாலோ அவருக்கு முன் ஜாமின் வழங்க சட்டத்தில் இடமில்லை. ஒரு வழக்கில் சட்டப்படி அது மோசடியா இல்லையா என்பதைத் தான் பார்க்க வேண்டும்.
அது, வர்த்தகப் பரிவர்த்தனையில் நடந்த மோசடி என்பதால் சாதாரணமாக கருதி முன்ஜாமின் வழங்கக் கூடாது.இந்த வழக்கில் வர்த்தக பரிவர்த்தனை என்பதால் தலைமறைவாக உள்ளவருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. சரிவர ஆராயாமல் அளிக்கப்பட்ட இந்த முன்ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X